சிந்து கேட்ட உதவியை விஜய் செய்து தருவாரா? வேதனையில் தவிக்கும் கிருஷ்ணா - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவருமே ஆபீஸிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இந்த நேரத்தில் வளைகாப்பு தேவையா? என்றார். விஜய், கண்டிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவித்து தான் ஆகணும். எனக்காக வளைகாப்பு நீ செய்து கொள் என்றெல்லாம் சொல்வதால் காவிரியும் ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் பாட்டி கல்யாணி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு போனார்கள். உடனே சிந்து, பாட்டியை செக் செய்தார். கல்யாணிக்கு சுகர் குறைந்திருக்கிறது என்று பாலில் சர்க்கரை அதிகமாக போட்டு சிந்து குடிக்க வைத்தார்.
சித்தி சிந்துவை குடிக்க விடாமல் தடுத்தார். இருந்தாலும் கேட்கவில்லை சிந்து குடிக்க வைத்து விட்டார். உடனே பாட்டியும் கண் விழித்து விட்டார். அதற்குப்பின் சிந்து, பாட்டியின் சுகர் லெவல் செக் செய்தார். மாத்திரை போட்டு 20 நிமிடம் கழித்து சாப்பிடனும் என்று சிந்து சொன்னார். பின் வீட்டிற்கு வந்த டாக்டர், சிந்து சொன்னதை தான் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஷாக் ஆக இருந்தது. டாக்டர், வீட்டிலேயே ஒரு டாக்டரை வைத்துக்கொண்டு எதற்காக என்னை கூப்பிட்டீர்கள். அவர்களே எல்லாம் பார்த்து விட்டார்கள்.தாமதம் செய்து இருந்தால் தான் பாட்டிக்கு இவர்களுக்கு ஏதாவது ஆகிருக்கும் என்றார்.
மகாநதி:
விஜய், நமக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை. நம்மீது நம்பிக்கை வைத்தவர்கள் ஏமாறக்கூடாது என்றார். பின் இதைப்பற்றி ஐயப்பனிடம் சித்தப்பா கேட்டு தெரிந்து கொண்டு தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுத்தார். இதை காவிரி கேட்டு விட்டார். பின் இதைப்பற்றி காவேரி, விஜயிடம் சொன்னார். பின் விஜய், இவ்வளவு பிரச்சனை ஆனதற்கு காரணம் நீங்கள் தான் என்று எனக்கு தெரியும். இந்த பிரச்சனை எல்லாம் தெரிந்தும் நீங்கள் என்னிடம் சொல்ல வில்லை என்றார். சித்தப்பாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் விஜய்- காவிரி இருவருமே சந்தோஷமாக பிரச்சனையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாட்டி உடல்நிலை சரியில்லாமல் போன விஷயத்தை எல்லாம் தாத்தா, விஜய் இடம் சொல்கிறார். விஜய்-காவிரி இருவரும் சிந்துவை பார்ப்பதற்காக கெஸ்ட் ஹவுஸிற்கு செல்கிறார்கள். அப்போது விஜய், நீ செய்தது பெரிய விஷயம். ரொம்ப நன்றி என்று சிந்துவிடம் பணம் கொடுக்கிறார். முத்துமலர், சிந்து வேணாம் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் விஜய் கேட்காமல் கொடுக்கிறார். அப்போது சிந்து, நான் நர்சிங் முடித்து இருக்கிறேன். எனக்கு வேலை வாங்கித் தர முடியுமா?
என்று கேட்கிறார். விஜய் எதுவும் சொல்லாமல் சரி என்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் முத்துமலர், கிருஷ்ணா எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார். பின் காவிரி, நர்மதாவை வரவைத்து நடந்ததை விசாரிக்கிறார். அப்போது கிருஷ்ணா மீது தவறில்லை என்பதை விஜய் புரிந்து கொள்கிறார். மறுநாள் காலையில் வாக்கிங் செல்லும் போது கிருஷ்ணாவை சந்தித்து விஜய், காவிரி இருவரும் பேசுகிறார்கள். அப்போது விஜய், கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்கிறார். கிருஷ்ணாவும் எமோஷனலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது