உடல்நிலை சரியில்லாமல் அவஸ்தைப்படும் விஜய், காவிரி போட்ட புது திட்டம் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் கங்கா மாமியார், யாரோ ஒருவர் காவிரி ரூமுக்கு சென்று விட்டார் என்று புலம்பி இருந்தார். உடனே காவிரியின் அம்மா ரூம் முழுக்க தேடினார். காவிரி, இங்கு யாருமே இல்லை. நீங்கள் பேய் பார்த்து பயந்து இருப்பீர்கள் என்று கங்காவின் மாமியாரை பயமுறுத்துகிறார். எல்லோரும் சென்றதற்குப் பின் விஜய் வந்தார். மறுநாள் காலையில் காவிரியின் முகத்தில் அம்மை குறைந்து இருந்தது. இதை பார்த்த அவருடைய அம்மா, தண்ணி ஊற்றி விடலாம் என்றார். அதற்குப்பின் காவேரி- விஜய் இருவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
காவிரி, விஜய் இருவருமே ஹாஸ்பிடல் போனார்கள். அங்கு டாக்டர், காவிரிக்கு ஸ்கேன் செய்தார். அப்போது குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்று காவிரி- விஜய் இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். ஆனால், டாக்டர் எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொன்னார்கள். இதனால் காவேரி- விஜய் சந்தோஷப்பட்டார்கள். பின் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் பசுபதி காவிரி- விஜயை பார்த்து விட்டார். உடனே பசுபதி, போலீஸ்க்கு போன் செய்து விஜய் இருக்கும் இடத்தை சொன்னார்கள். காவிரி- விஜய் கார் ஓட்டி கொண்டு வரும்போது பின்னாடியே போலீசும் துரத்தி வந்தார்கள்.
மகாநதி சீரியல்:
இதனால் விஜய் என்ன செய்வதென்று புரியாமல் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்று விட்டார். அப்போது விஜய் காரை விட்டு இறங்கி விட்டார். பின் காவிரி வண்டியை தடுத்து நிறுத்திய போலீஸ், விஜய் எங்கே? என்று விசாரித்தார்கள். காவிரி, எனக்கு தெரியாது. நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வருகிறேன் என்று சொன்னார். உடனே பசுபதி, இவர்கள் இருவரும் வருவதை நான் பார்த்தேன். பொய் சொல்கிறார் என்றார். காவிரி, எனக்கு அம்மை போட்டு இருக்கிறது. அதனால் யாரையுமே கூப்பிடாமல் தான் ஹாஸ்பிடலுக்கு வந்தேன் என்று சொன்னார். இதனால் போலீஸ், காவிரி சொன்னதை நம்பி அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் காவிரி, பசுபதியை மிரட்டி விட்டு சென்றார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பசுபதி இருக்கும் இடத்தை பற்றி காவிரி, விஜய் இடம் சொன்னார். பின் பசுபதி வரும் வழியில் குமரன் வந்தார். உடனே குமரன், பசுபதியை பார்த்தவுடன் சண்டை போட்டார். பசுபதி குமரனை தள்ளிவிட்டு தப்பிக்கும்போது விஜய் வந்து நின்றார். அந்த சமயம் பார்த்து நிவினும் வந்து விட்டார். மூன்று பேருமே சேர்ந்து பசுபதியை புரட்டி எடுத்தார்கள். பின் மூன்று பேரிடம் இருந்தே பசுபதி தப்பித்து சென்று விட்டார். பின் தன் மகளிடம் நடந்ததை சொல்லி புலம்பி இருந்தார் பசுபதி.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, விஜய் இருவருமே பசுபதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜயின் கையில் அம்மை போட்டிருப்பதை காவிரி கவனித்து விடுகிறார். உடனே டாக்டரிடம் ஃபோன் செய்து கேட்கிறார்கள். விஜய்க்கு போட்டது அம்மை என்றுதான் உறுதி செய்கிறார். இதனால் காவேரி ரொம்பவே பயப்படுகிறார். விஜய், இனி நான் இங்கு இல்லை. கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறேன். நீ கவனமாக இரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அதற்குப் பின் காவிரி தன்னுடைய அம்மா வீட்டிற்கு போகிறார். அங்கு அவர்கள் காவிரியை ரெஸ்ட் எடுக்க சொல்கிறார்கள். அப்போது காவிரி, அப்பளம் போடும் விஷயமாக ஒர்க் ஷாப் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
அங்கு ஒரு வாரம் ட்ரைனிங் எடுக்க நான் போகிறேன் என்று கேட்டார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அவரை விட வில்லை. அந்த சமயம் பார்த்து நிவின், யமுனா இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். காவிரியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்கிறார்கள். அதற்குப்பின் காவிரி, நிவின் இருவரும் தனியாக பேசுகிறார்கள். அப்போது காவிரி, ஒர்க்ஷாப் விஷயமாக அம்மாவிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். விஜய்க்கு உடம்பு சரியில்லை. நான் தான் அவருடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து யமுனா இன்னும் கோபப்படுகிறார். அதற்குப்பின் நிவின், ஒர்க் ஷாப் விஷயத்தை பற்றி காவிரியின் அம்மாவிடம் பேசுகிறார். அவர் ஆரம்பத்தில் தயங்கினாலும் நிவின் சொன்னதைக் கேட்டு சரி என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.