சந்தானம் பிறந்தநாளுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் எமோஷனலான காவிரி -விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் பசுபதி இருக்கும் இடத்தை பற்றி காவிரி, விஜய் இடம் சொன்னார். பின் பசுபதி வரும் வழியில் குமரன் வந்தார். உடனே குமரன், பசுபதியை பார்த்தவுடன் சண்டை போட்டார். பசுபதி குமரனை தள்ளிவிட்டு தப்பிக்கும்போது விஜய் வந்து நின்றார். அந்த சமயம் பார்த்து நிவினும் வந்து விட்டார். மூன்று பேருமே சேர்ந்து பசுபதியை புரட்டி எடுத்தார்கள். பின் மூன்று பேரிடம் இருந்தே பசுபதி தப்பித்து சென்று விட்டார். பின் தன் மகளிடம் நடந்ததை சொல்லி புலம்பி இருந்தார் பசுபதி.
காவிரி, விஜய் இருவருமே பசுபதியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது விஜயின் கையில் அம்மை போட்டிருப்பதை காவிரி கவனித்து விட்டர். உடனே டாக்டரிடம் ஃபோன் செய்து கேட்டார்கள். விஜய்க்கு போட்டது அம்மை என்றுதான் உறுதி செய்தார். இதனால் காவேரி ரொம்பவே பயப்பட்டார். விஜய், இனி நான் இங்கு இல்லை. கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறேன். நீ கவனமாக இரு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதற்குப் பின் காவிரி தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனார். அங்கு அவர்கள் காவிரியை ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். அப்போது காவிரி, அப்பளம் போடும் விஷயமாக ஒர்க் ஷாப் நடக்கிறது.
மகாநதி சீரியல்:
அங்கு ஒரு வாரம் ட்ரைனிங் எடுக்க நான் போகிறேன் என்று கேட்டார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அவரை விட வில்லை. அந்த சமயம் பார்த்து நிவின், யமுனா இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். காவிரியின் உடல் நலத்தை பற்றி விசாரித்தார்கள். அதற்குப்பின் காவிரி, நிவின் இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். அப்போது காவிரி, ஒர்க்ஷாப் விஷயமாக அம்மாவிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். விஜய்க்கு உடம்பு சரியில்லை. நான் தான் அவருடன் இருக்க வேண்டும் என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்து யமுனா இன்னும் கோபப்பட்டார். அதற்குப்பின் நிவின், ஒர்க் ஷாப் விஷயத்தை பற்றி காவிரியின் அம்மாவிடம் பேசி இருந்தார். அவர் ஆரம்பத்தில் தயங்கினாலும் நிவின் சொன்னதைக் கேட்டு சரி என்றார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு விஜய் இருக்கும் இடத்திற்கு போனார். அப்போது விஜய், இங்கே எதற்காக வந்தாய்? வீட்டில் ஏதாவது சொல்லப் போகிறார்கள் என்றார். அதற்கு காவிரி, அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை இந்த நிலைமையில் தனியாக விட முடியாது என்று சொன்னார். அதற்கு பின் நிவின் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு பின் காவேரி, பார்த்து பார்த்து விஜய்யை கவனிக்கிறார். ரெண்டு பேருமே ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த நிவினை பார்த்து யமுனா, வழக்கம் போல சண்டை வாங்குகிறார். காவிரியிடம் என்ன பேசினீர்கள்? எதற்காக அவளை அழைத்து கொண்டு வெளியே போனீர்கள்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். நிவின் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் கொந்தளித்த யமுனா, நிவினை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். ஆனால், நிதின் எதையுமே கண்டுகொள்ளாமல் பாட்டு போட்டுவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்க யமுனாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் விஜய்க்கு அம்மை அதிகமாகுவதால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் காவேரி பார்த்து பார்த்து அவரை கவனிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் வேப்பிலை பறிப்பதற்காக காவிரி மரத்தின் மேலே ஏறி கீழே விழுந்து விடுவதால் அவருடைய காலில் அடிபடுகிறது. இதனால் விஜய் திட்டுகிறார். இன்னொரு பக்கம் சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் அவருடைய மனைவி, மகள்கள் எல்லோருமே சாமி கும்பிடுகிறார்கள். இதை அறிந்த விஜய், கேக் ஆர்டர் செய்கிறார். பின் தன்னுடைய அப்பாவின் பிறந்த நாள் கேக்கை பார்த்தவுடன் காவேரி எமோஷனலாக அழுகிறார். பின் காவிரி தன்னுடைய அப்பாவின் புகைப்படத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்டி கொண்டாடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.