வெளிவரும் கிருஷ்ணா குடும்பத்தின் சுயரூபம், சந்தேகப்படும் விஜய் - பரபரப்பில் மகாநதி

By subhashini · 8/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவரும் வீட்டில் உள்ள எல்லோருக்குமே துணி எடுத்துக்கொண்டு வந்தார்கள். காவிரி தன்னுடைய வீட்டில் உள்ள எல்லோருக்கும் துணி கொடுத்து விட்டு முத்து மலர் குடும்பத்திற்கும் துணி எடுத்திருக்கும் விஷயத்தை தன் அம்மாவிடம் சொன்னார். முதலில் கோவப்பட்ட சாரதா, பிறகு கொடுப்பதற்கு ஒத்து கொண்டார். பின் துணிகளை எல்லாம் முத்துமலர் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு வளைகாப்பிற்கு கூப்பிட்டார் காவிரி. அதற்குப்பின் விஜய் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

பின் காவிரி, நம் கஸ்டமர்ஸ் எல்லோரையும் கூப்பிடலாம். இது கொஞ்சம் சுயநலமாக இருந்தாலும் அவர்கள் நமக்காக டைம் கொடுத்ததற்கு நம்முடைய விசுவாசமாக இருக்கட்டும். அவர்களுடன் நமக்கு நல்ல உறவு ஏற்படும் என்று சொன்னார். பின் காவிரி, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி அழைத்தார். இதை பார்த்து கிருஷ்ணாவுமே ஃபீல் பண்ணுகிறார். பின் கிருஷ்ணா, காவிரியின் நல்ல மனதை பாராட்டினார்.

மகாநதி:

காவிரியின் வளைகாப்பிற்காக விஜய் சூப்பராக ஏற்பாடு செய்திருந்தார். அதை பார்த்து காவேரி அசந்து போய்விட்டார். பின் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. விஜயின் குடும்பத்தார், உற்ற உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே விழாவிற்கு வந்தார்கள். காவிரி ரொம்ப அழகாக தயாராகி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே காவிரி- விஜய் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். சாரதா, தன் கணவர் இந்த நேரத்தில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டார். பின் நல்லபடியாக வளைகாப்பு விழா துவங்குகிறது. காவிரியின் அழகை கண்டு விஜய் ரசித்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோலாகலமாக காவிரியின் வளைகாப்பு விழா நடைபெறுகிறது.
விழாவில் விஜய் தங்களுடைய குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று போர்டில் எல்லோரையும்
எழுத சொல்கிறார். பின் விஜய், இதிலிருந்து ஒரு பெயரைதான் எங்கள் குழந்தைக்கு வைக்கப் போகிறோம் என்று வாக்குறுதியும் கொடுக்கிறார். அதற்குப்பின் கிருஷ்ணா, பில்டிங் மேப் ஒன்றை காண்பிக்கிறார். அதை விஜய் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நம்பரில் இருந்து போன் வருகிறது.

சீரியல் ட்ராக்:

உடனே கிருஷ்ணா வெடுக்கு என்று போனை பிடுங்கி விடுகிறார். இதனால் விஜய்க்கு சந்தேகம் வருகிறது. அதற்குப்பின் கிருஷ்ணா,தன்னுடைய அம்மா, தங்கை இருவரையும் சந்தித்து, நாம் இங்கு எதற்காக வந்தோம்? யார் சொல்லி இங்க வந்தோம்? ஆனால், நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். காவிரிக்கு வளையல் போடுவது தான் நம்ம வேலையா? சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு போகணும் என்று தன்னுடைய சுய ரூபத்தை காண்பிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full