காவிரிக்காக பார்த்து பார்த்து செய்யும் விஜய், டாக்டர் சொன்ன வார்த்தை - மகாநதி

By subhashini · 19/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரி அம்மா, நீங்கள் இதை விஜயிடம் சொல்ல வேண்டியது தானே, நீங்கள் எதுக்கு இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறீர்கள் என்று கேட்டார். உடனே குமரன், இது காவிரியை பழிவாங்க பசுபதி செய்த வேலை. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் சொன்னார். அதற்குப்பின் காவிரிக்கு போன் செய்த விஜய், ஏன் என்னிடம் இந்த உண்மையை சொல்லவில்லை? என்று கோபப்பட்டார். அதற்கு காவேரி, இது என்னால் வந்த பிரச்சனை. தேவையில்லாமல் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே விஜய், எதுவாக இருந்தாலும் நாம் சேர்ந்து பார்த்துக் கொள்ளலாம். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார்.

மறுநாள் காலையில் காவிரிக்கு உடல்நிலை சரியில்லாமல் முகத்தில் எல்லாம் அம்மை போட்டிருக்கிறது. இதை பார்த்த கங்காவின் மாமியார், உனக்கு அம்மா போட்டிருக்கிறது. நீ தள்ளி இரு என்று சொன்னார். உடனே கங்கா, காவிரி பார்க்க வந்தார். ஆனால், அவரை கிட்ட விடாமல் நீ வெளியே நில்லு. குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று சொன்னார். பின் காவிரி, விஜய் தங்கி இருந்த ரூமிற்கு சென்று விட்டார். அப்போது போன் செய்த விஜய்யிடம் காவிரி, எனக்கு உடம்பு சரியில்லை. எனக்கு அம்மா போட்டது. அதனால் என்னை எல்லோரும் தனியாக இருக்க சொன்னார்கள். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்று பயமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணி பேசி இருந்தார். விஜய், நீ தைரியமாக இரு என்று ஆறுதல் சொன்னார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் காவிரியை பார்ப்பதற்காக விஜய் வீட்டிற்க்கே வந்து விட்டார். விஜய்யை பார்த்தவுடன் காவிரி ஷாக் ஆகி, இங்கே எதற்கு வந்தீர்கள்? தயவு செய்து கிளம்புங்கள் என்று சொன்னார். அதற்கு விஜய், உனக்கு உடம்பு சரியில்லாமல் போது நான் எப்படி போவேன். நான் இங்கே இருந்து உன்னை பார்த்துக்கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே, பயப்படாதே என்று சொன்னார்.
மறுநாள் காலையில் விஜய், காவிரி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரியின் அம்மா கதவை தட்டினார் எதுவுமே தெரியாமல் விஜய் கதவை திறந்துவிட்டார். ஆனால், காவேரி அம்மா கங்காவிடம் பேசிக் கொண்டிருப்பதால் விஜயை பார்க்கவில்லை.

நேற்று எபிசோட்:

உடனே விஜய் ஒளிந்து கொள்ள, காவிரி பதறி அடித்துக் கொண்டு எழுந்து, தன் அம்மாவிடமிருந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்புங்கள் என்று சொன்னார். அதற்கு அவர், என்னாச்சு? உடம்பில் வேற ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேட்டார். ஏதேதோ சொல்லி காவிரி சமாளித்து தன் அம்மாவை அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய் ஹாஸ்பிட்டலுக்கு போனார். அங்கு விஜய், காவிரிக்கு அம்மை போட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு டாக்டர், சில அம்மை குழந்தைக்கு பாதிப்பு தராது. ஆனால், சில அம்மையால் குழந்தைக்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னவுடன் விஜய் ரொம்பவே ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் டாக்டர், அம்மை போட்டால் எல்லோருக்குமே குழந்தையை பாதிக்கும் என்று அர்த்தம் இல்லை. பாசிட்டிவாக தான் நடக்கும். உங்கள் மனைவியை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்கிறார். பின் விஜய், காவிரிக்கு வீடியோ கால் செய்து டாக்டரிடம் பேச வைக்கிறார். டாக்டருமே காவிரிக்கு அறிவுரை சொல்கிறார் அதற்குப்பின் விஜய் இருக்கும் ஹாஸ்பிடலில் தான் குமரன், நிவின் இருவருமே பசுபதியை பற்றி விசாரிக்கிறார்கள். அப்பொழுது வெளியே வந்த விஜய், பசுபதியை பத்தி ஏதாவது தெரிந்ததா? என்று கேட்கிறார். குமரன், எதுவுமே தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வெளியில் வராதீர்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் நிவின், காவிரிக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கிறார். அதற்கு விஜய், அந்த விஷயமாக தான் டாக்டரிடம் பேச வந்தேன். குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று காவிரி ரொம்ப பயப்படுகிறாள் என்று சொல்லி வேதனைப்படுகிறார். உடனே நிவின், விஜய்க்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். பின் விஜய் வீட்டிற்கு வருகிறார். வரும்போது வீட்டின் ஓனர் மாமி பார்த்துவிட்டு நீங்கள் காவிரி இருக்கும் ரூமில் வேப்பிலையை கட்டி விடுங்கள். நிறைய பழங்கள், குளிர்ச்சியான பொருட்களை கொடுத்தால் சீக்கிரம் குணமாகி விடும் என்று சொல்கிறார். இதனால் விஜயும் காவிரி இருக்கும் ரூமிற்கு வெளியே வேப்பிலை கட்டிவிட்டு காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்கிறார். இதை பார்த்து காவேரி சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full