தன் குடும்பத்தை வெறுக்கும் விஜய், காவிரியை சந்தித்தாரா? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வீடு பூட்டு போட்டு இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விஜய் விசாரிக்க, இருவரும் வெளியே போய் இருப்பதாக சொன்னார்கள். பின் விஜய், காவேரியின் புகைப்படத்தை காண்பித்து கேட்டார். அதற்கு அவர்களும் ஆமாம் என்றார்கள். இதனால் விஜய் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் யமுனாவை பார்க்க சாரதா, காவிரி இருவரும் பார்க்கப் போனார்கள். பின் யமுனாவை பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் அங்கேயே தங்குகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி தாத்தாவிடம் கேட்டார். அவர் ஷாக் ஆகி நிற்கிறார்.
விஜய், உண்மையாலுமே காவிரிக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்கள் தாத்தா என்றார். சித்தி, சித்தப்பா, தாத்தா எல்லோருமே காவிரி இறந்து விட்டதாக சொன்னார்கள். இருந்தாலும் விஜய் நம்பவில்லை. பின் விஜய், தன் மொபைலில் இருக்கும் காவிரி வீடியோவை ஆதாரமாக காண்கிறார். அதை பார்த்து தாத்தா சோமு ஷாக் ஆனார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோமு, காவிரி இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்றார். இதனால் விஜய் உறைந்து போய் நிற்கிறார்.
மகாநதி:
பின் தாத்தா சோமு, காவிரி மறந்து போன விஷயத்தையும் பாட்டி சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய் நொறுங்கிப் போனார். பின் கோபத்தில் விஜய், எதற்காக இப்படி செய்தீர்கள்? நீங்கள் சொன்னதை நம்பி நானும் என் பொண்ணும் காவிரியை பிரிந்து இருக்கிறோம் என்று எமோஷன் ஆக பேசி அழுதார். அப்போது அன்பரசு, காவிரிக்கு உன் ஞாபகமும் குழந்தை ஞாபகம் இல்லை என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், தாத்தா-சித்தி- சித்தப்பா மூவர் மீதும் பயங்கரமாக கோபப்படுகிறார். இனிமேல் என்னை பற்றியும் என் குழந்தை பற்றியும் நீங்கள் எந்த கவலையும் பட தேவையில்லை. எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதனால் விஜய் தாத்தா ரொம்ப எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறார். பின் பள்ளிக்கூடத்தில் அம்முவை அழைத்துக் கொண்டு விஜய் வருகிறார். அப்போ அம்மு, கிளாஸ் மிஸ் இல்லாமல் ஸ்கூல் போகவே விருப்பமில்லை என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
விஜய், சீக்கிரமாகவே உன் கிளாஸ் மிஸ் வந்துவிடுவார் கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்கிறார்.
அதற்குப் பின் வீட்டிற்கு வந்த விஜய், தன் மகளுக்கும் தனக்கும் தேவையான எல்லா வேலைகளையும் செய்கிறார். தன் சித்தி உதவி செய்ய வந்ததற்குமே விஜய் திட்டி அனுப்பி விடுகிறார். மறுநாள் காலையில் காவிரியை சந்திக்க அவர் வீட்டின் வெளியே விஜய் காத்து கொண்டிருக்கிறார். அப்போது காவிரி ஆட்டோவில் இருந்து வந்து இறங்குகிறார். காவிரியை பார்த்தவுடன் விஜய் எமோஷனலாக அழுகிறார். காவிரி வீட்டிற்குள் செல்கிறார்.