கிருஷ்ணா சொன்ன வார்த்தையால் விஜய் எடுத்த அதிரடி முடிவு, கோபத்தில் கொந்தளிக்கும் காவிரி - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர், அக்கா என்று கூப்பிட்டு பேசி இருந்தார். கோபத்தில் சாரதா மீண்டும் சண்டை போட்டார். உடனே காவிரி, கங்கா இருவரும் தடுத்து விட்டார்கள். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வந்தார். அப்போது சாரதா, முத்துமலர் குடும்பத்தை: திட்டிக் கொண்டிருந்தார். விஜயுமே ஆறுதல் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து விஜயின் பாட்டி, சித்தி இருவரும் கோபப்பட்டார்கள். சாரதா குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார்கள்.
பாட்டி,சித்தி எல்லோருமே ஒன்றாக இருப்பதால் காவிரி அவர்களிடம் பேசப் போனார். வழக்கம் போல பாட்டி, காவிரியின் உடல்நலத்தை பற்றி விசாரித்து விட்டு சாரதா, முத்து மலரை பற்றி பேசி இருந்தார். பின் பாட்டி, சீக்கிரமாக உன் குடும்பத்தை இந்த வீட்டை விட்டு போக சொல்லு. இங்கே இருப்பதே எங்களுக்கு பிடிக்கவில்லை என்றார். காவிரி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் வந்த விஜய், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். காவிரிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார். உடனே பாட்டி கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
மகாநதி:
அதற்குப்பின் சிந்து பசி தாங்க முடியாமல் கிச்சனில் இருக்கும் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிட்டார். அப்போது வந்த சித்தி,நாங்கள் சாப்பிட்ட மிச்சம் மீதி தான் நீ சாப்பிட வேண்டும். உனக்கு கிச்சனில் வர அனுமதி இல்லை என்று சிந்துவை மோசமாக திட்டி வெளிய அனுப்பி விட்டார். இதனால் மனமடைந்து சிந்து வெளியே அழுது கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த காவேரி, சிந்துவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதற்குப்பின் காவிரி-கங்கா, சிந்துவிடம் தன்னுடைய அப்பாவை பற்றியும் திருமணமான கதையை பற்றி எல்லாம் கேட்டு ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்து சொன்ன விஷயத்தால் கடுப்பான கங்கா எல்லாத்தையும் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். சாரதாவிற்கு கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த கிருஷ்ணா, சொத்தில் சரி பாதி கொடுக்க வேண்டும். ஒரு பங்கு எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறார். உடனே விஜய், அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்புங்கள். நீங்கள் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதற்கு கிருஷ்ணா, நான் எதற்காக போனோம். என்னால் போக முடியாது என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட காவிரி, கிருஷ்ணாவிடம் சண்டைக்கு போகிறார். பின் விஜயின் தாத்தா, பாட்டி இருவருமே முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொல்கிறார். இதனால் விஜய் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து சொத்தில் ஒரு பங்கு தருகிறோம். இல்லை என்றால் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதற்கு முத்து மலர், நாங்கள் எங்கே போக முடியும்? எங்களுக்கான பங்கை கொடுத்து விடுங்கள். நாங்கள் கிளம்பி விடுகிறோம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது