ஆத்திரத்தில் பசுபதி போட்ட சவாலுக்கு பதிலடி கொடுத்த விஜய், கங்கா சொன்ன வார்த்தை - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்க்கு போன் செய்த காவிரி, எங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அப்போது விஜய், ராகவை கடத்திய விஷயத்தைப் பற்றி சொன்னார். ஆரம்பத்தில் பதறிய காவிரி வீட்டை மீட்க தான் இப்படி விஜய் செய்தார் என்று தெரிந்தவுடன் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் கங்கா, குமரன் எங்கே என்று கேட்டார். அப்போது காவிரி, நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் கோபப்பட்டு கங்கா, விஜய் - காவிரியை திட்டினார். காவிரி சமாதானம் செய்தும் கங்கா கேட்கவில்லை.
பின் கங்கா போன் செய்ய, குமரனும் நடந்த விஷயத்தை சொன்னார். பின் கங்கா திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்ப சொன்னார். ஆனால், குமரன் கேட்காமல் போனை வைத்து விட்டார். இதனால் கங்கா, விஜய் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அதற்குப்பின் பசுபதி சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த விஜய், சாரதா அத்தை வீட்டிற்கு கிளம்பு. பத்திரத்தை எடுத்து வந்தாயா? என்றெல்லாம் கேட்க, பசுபதியும் ஆமாம் என்றார்.
மகாநதி:
நேற்று எபிசோடில் சாரதா வீட்டிற்கு வந்த பசுபதியிடம் போனில் விஜய், நான் சொல்வதைப்போலவே செய் என்றார். பசுபதியை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். பசுபதி, நான் செய்ததெல்லாம் தவறு. போலியான டாக்குமெண்ட் இதுதான் என்று விஜய் சொன்னது போல கிழித்து போட்டார். பின் ஒரிஜினல் பாத்திரத்தை சாரதாவிடம் கொடுத்தார். பின் காவிரிக்கு போன் செய்த விஜய், பத்திரத்தை செக் பண்ண சொன்னார். உங்களுக்கு பண்ண டார்ச்சலுக்கு திருப்பி ஒரு அறை கொடு என்றார். காவிரியும் கோபத்தில் பசுபதியை அறைந்து விட்டு வெளியே போக சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, எப்படி பசுபதியே பத்திரத்தை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்தான் என்று கேட்கிறார். அதற்கு காவேரி, ராகவை கடத்தின விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு சாரதா ஷாக் ஆனார். இருந்தாலுமே காவேரி எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். பின் பத்திரம் கிடைத்த சந்தோஷத்தில் தன்னுடைய கணவனின் போட்டோ முன்பு எமோஷனலாக சாரதா அழுது பேசுகிறார். இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனை தேடி போகிறார். ஆனால், விஜய் இங்கு அங்கு என்று அவரை அலைய வைக்கிறார். ஒரு கட்டத்தில் ராகவை, பசுபதியிடம் ஒப்படைக்கிறார் விஜய்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் பசுபதி சவால் எல்லாம் விடுகிறார். அதற்கு விஜய்- நிவின்-குமரன் மூவருமே பதில் கொடுக்கிறார்கள். பின் பசுபதி, ராகவை அழைத்து கொண்டு செல்கிறார். இன்னொரு பக்கம் கங்கா, குமரன் எங்கே? விஜயால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு காவிரி, பசுபதியால் தான் விஜய்க்கு பிரச்சனை. நம்மால் தான் விஜய் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். தேவையில்லாமல் அவரைப் பற்றி பேசாதே என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது