தன் பாட்டியை நினைத்து கவலைப்படும் விஜய், அவமானப்பட்ட காவிரி - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனாவும் இன்னும் கொஞ்சம் காவிரியை பற்றி ஏத்தி விட்டார். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வந்தார். அப்போது விஜய், நிவின் ரொம்ப பாவம். யமுனாவை தெரியாமல் நிவினுக்கு கல்யாணம் செய்து விட்டோம். அவர் ரொம்பவே எமோஷனலாக பேசி புலம்புகிறார் என்றெல்லாம் சொன்னார். காவிரியுமே வருத்தப்படுகிறார். பின் விஜய், காவிரிக்கு கால் அமுத்திவிட்டு பேசி கொண்டு இருந்தார். விஜய் கொடுத்த பணத்தை காவிரி, சாரதாவிடம் கொடுத்து வாடகை கட்ட சொன்னார். சாரதா வேண்டாம் என்று சொன்னாலுமே காவிரி கேட்கவில்லை.
பின் விஜய், பணம் கொடுத்த விஷயத்தை சொன்னவுடன் கங்காவுக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் கொடைக்கானல் வீட்டிற்கு வெளியே ரவுடிகள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வதாக சாரதாவிற்கு போன் வருகிறது. பின் காவிரி, வழக்கம் போல வீட்டை ரெண்டுக்கு விடலாம் என்றார். உடனே கங்கா, யார் அதை பார்த்துக் கொள்வது? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? என்றார். விஜய், கேமரா வைத்து அங்கு ஒரு ஆளை போட்டு வீட்டை பார்த்துக்கொள்ள சொல்லலாம். நாம் இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம். வீடும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்வதால் சாரதாவும் ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு லேட்டாக வந்தார்.
மகாநதி:
இதைப் பார்த்து அவருடைய அம்மா, ஏன் லேட்டாக வருகிறாய்? ஒழுங்காக நீ சாப்பிடுவது கூட இல்லை என்று வருத்தப்பட்டார். அப்போது நிவின், புதிதாக தான் தொடங்க இருக்கும் தொழிலை பற்றி பேசி இருந்தார். பின் நிவின் அம்மா, ரெண்டு பேருமே சேர்ந்து பேசி கூட நான் பார்த்ததில்லை. உனக்கு இந்த கல்யாணத்திலும் விருப்பமில்லை, அவளையும் பிடிக்கவில்லை. எதற்காக இப்படி கஷ்டப்பட்டு வாழனும், யமுனாவிற்கு விவாகரத்துக் கொடு என்றார். இதை கேட்டு யமுனாவிற்கு பயங்கர கடுப்பானது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிவின் அம்மா, யமுனாவிற்கு பணத்தை கொடுத்து இங்கிருந்து அனுப்பிவிடலாம். அதற்கு பின் உன் தொழிலை பற்றி யோசி. நீ சந்தோஷமாக இரு என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், நிவின் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார். இதையெல்லாம் பார்த்து யமுனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் காவிரி தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய், சத்தம் போடாமல் உள்ளே வருகிறார். இருந்தாலுமே காவிரி எழுந்து பாட்டிக்கு என்ன ஆனது? எப்படி இருக்கிறார்கள்? என்று விசாரிக்கிறார். அப்போது விஜய், பாட்டி உடல்நிலை மோசமாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அவர் என்னைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் எமோஷனலாக பேசுகிறார். மறுநாள் காலையில் பாட்டியை பார்க்க விஜய்- காவிரி இருவருமே போகிறார்கள். அப்போது தாத்தா, இரவில் இருந்தே பாட்டி பயந்து புலம்புகிறார். என்ன சொல்வது என்று தெரியவில்லை என்கிறார். பின் பாட்டியை பார்த்த விஜய், என்னானது பாட்டி? தைரியமாக இருங்கள் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு பாட்டி, நீ என்னுடனே இரு. எங்கும் போகாதே என்று சொல்கிறார். காவிரி, பாட்டியிடம் விசாரிக்கிறார். உடனே பாட்டி, காவிரியை தள்ளிவிட்டு நீதானே விஜயை என்னிடமிருந்து பிரித்துப் போனாய்? நீ இங்கிருந்து போ என்றெல்லாம் திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது