காவிரியின் ஸ்கேனை நினைத்து வருத்தப்படும் விஜய், சாரதா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி, ராகவை கடத்தின விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு சாரதா ஷாக் ஆனார். இருந்தாலுமே காவேரி எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். பின் பத்திரம் கிடைத்த சந்தோஷத்தில் தன்னுடைய கணவனின் போட்டோ முன்பு எமோஷனலாக சாரதா அழுது பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனை தேடி போனார். ஆனால், விஜய் இங்கு அங்கு என்று அவரை அலைய வைத்தார். ஒரு கட்டத்தில் ராகவை, பசுபதியிடம் ஒப்படைத்தார் விஜய்.
கோபத்தில் பசுபதி சவால் எல்லாம் விட்டார். அதற்கு விஜய்- நிவின்-குமரன் மூவருமே பதில் கொடுத்தார்கள். பின் பசுபதி, ராகவை அழைத்து கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் கங்கா, குமரன் எங்கே? விஜயால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு காவிரி, பசுபதியால் தான் விஜய்க்கு பிரச்சனை. நம்மால் தான் விஜய் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். தேவையில்லாமல் அவரைப் பற்றி பேசாதே என்று திட்டினார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் வீட்டிற்கு வந்த குமரனை பார்த்து கங்கா முறைத்துக் கொண்டிருந்தார். அப்போது சாரதா, விஜயின் காலில் விழுந்து எமோஷனலாக நன்றி சொல்லி அழுதார். பின் விஜய், உங்களுக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் வரவிடமாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயை ஹீரோ போல பேசினார்கள். இது எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வந்தது. இன்னொரு பக்கம் நிவின் செய்த வேலையை தெரிந்த அவருடைய அம்மா திட்டி கொண்டிருந்தார். ஆனால், நிவின் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் விஜய்- காவிரி இருவருமே பசுபதி இடமிருந்து பத்திரத்தை மீட்டதை பற்றி ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரி, ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகணும் என்று சொல்கிறார். உடனே குமரன், கங்காவிற்கும் செய்யணும் என்று சொல்கிறார். காவிரி, ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்று சொன்னார். ஆனால், கங்கா வேண்டாம் என்று தவிர்கிறார்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போயிட்டு வாருங்கள் என்று சொல்வதால் கங்காவும் அமைதியாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் விஜய், காவிரியின் ஸ்கேன் நினைத்து வருத்தப்படுகிறார். இதை அறிந்த காவிரி அம்மா,என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அப்போது விஜய், அம்மை வந்திருந்ததால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது என்று புலம்புகிறார். அதற்கு சாரதா ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது