காவிரியை ஒதுக்கி வைத்த குடும்பம், விஜய் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வீட்டில் எல்லோருமே குமரனுக்கு அடிபட்டிருப்பதை பார்த்து பயந்து விட்டார்கள். குமரன், பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக பொய் சொல்லி இருந்தார். அதற்குப்பின் கடையிலிருந்து குமரனுக்கு போன் வர, அதைக் கேட்டவுடன் குமரன் பதறி கொண்டு தன்னுடைய துணிக்கடைக்கு போய் பார்த்தார். அங்கு அவருடைய கடையை அடித்து நொறுக்கி இருந்தார்கள். பின் இதை குமரன், நிவினிடம் சொல்ல, அவரும் வந்து விட்டார். அதிர்ச்சியில் நிவின், இது பசுபதி செய்த வேலைதான் என்று சொன்னார். குமரன் மனமுடைந்து அழுதார். அதற்குப்பின் குமரன் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால், உண்மையை மறைத்து விட்டார்.
இன்னொரு பக்கம் காவிரி, நிவினுக்கு போன் செய்து என்ன நடந்தது? என்று விசாரித்தார். அப்போது நிவின், கடையை அடித்து நொறுக்கிய விஷயத்தை சொன்னவுடன் காவிரி வருத்தப்பட்டார். நிவின் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார். இதை பார்த்த யமுனா, வழக்கம் போல் நிவின், காவிரியை சந்தேகப்பட்டு சண்டை வாங்கி இருந்தார். பின் காவிரி இதையெல்லாம் விஜயிடம் சொன்னார். மறுநாள் காலையில் குமரன் கடைக்கு போனார். அங்கு நிவின்- குமரன் இருவருமே கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த விஜய் கடையை பார்த்து ஷாக் ஆனார்.
மகாநதி சீரியல்:
விஜய், என்னானது? யார் செய்த வேலை? என்று கேட்டார். அப்போது குமரன், இது பசுபதி செய்தவேலைதான் என்று சொன்னார். உடனே விஜய், என்னால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது என்று எமோஷனாக பேசி இருந்தார். அதற்கு குமரன், எங்களால்தான் உங்களுக்கு பிரச்சனை என்று இருவருமே மாற்றி மாற்றி பேசிக்கொண்டார்கள். பின் நிவின், விஜய், குமரன் மூவருமே பசுபதியை பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். விஜய் சென்ற பிறகு கங்கா, காவிரி இருவருமே கடைக்கு வந்தார்கள். கடையை பார்த்து கங்கா கதறி அழுதார். குமரன், காவிரி இருவருமே சமாதானம் செய்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது யார் செய்தது? என்று கங்கா கேட்க, நடந்த உண்மை எல்லாத்தையும் குமரன் சொல்லி விட்டார். அதற்குப்பின் பசுபதி போன் செய்து குமரனை வெறுப்பேற்றி இருந்தார். குமரன், காவேரி, நிவின் மூவருமே மாற்றி மாற்றி பசுபதி இடம் பேசி இருந்தார்கள். எப்படியாவது பசுபதியை பிடிக்க வேண்டும் என்று காவிரி சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த குமரனிடம் விசாரித்தார்கள். அப்போது கங்கா கடையில் நடந்த எல்லா உண்மையும் சொல்லி விட்டார். இதனால் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
இன்று எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரி அம்மா, நீங்கள் இதை விஜயிடம் சொல்ல வேண்டியது தானே, நீங்கள் எதுக்கு இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார். உடனே குமரன், இது காவிரியை பழிவாங்க பசுபதி செய்த வேலை. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் காவிரிக்கு போன் செய்த விஜய், ஏன் என்னிடம் இந்த உண்மையை சொல்லவில்லை? என்று கோபப்படுகிறார். அதற்கு காவேரி, இது என்னால் வந்த பிரச்சனை. தேவையில்லாமல் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். உடனே விஜய், எதுவாக இருந்தாலும் நாம் சேர்ந்து பார்த்துக் கொள்ளலாம். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் காவிரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவருடைய முகத்தில் எல்லாம் அம்மை போட்டிருக்கிறது. இதை பார்த்த கங்காவின் மாமியார், உனக்கு அம்மா போட்டிருக்கிறது. நீ தள்ளி இரு என்று சொல்கிறார். உடனே கங்கா, காவிரி பார்க்க வருகிறார். ஆனால், அவரை கிட்ட விடாமல் நீ வெளியே நில்லு. குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று சொல்கிறார். பின் காவிரி, விஜய் தங்கி இருந்த ரூமிற்கு சென்று விடுகிறார். அப்போது போன் செய்த விஜய்யிடம் காவிரி, எனக்கு உடம்பு சரியில்லை. எனக்கு அம்மா போட்டிருக்கிறது. அதனால் என்னை எல்லோரும் தனியாக இருக்க சொன்னார்கள். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்று பயமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். விஜய், நீ தைரியமாக இரு என்று ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.