காவிரியை பார்க்க வீட்டிற்கு வந்த விஜய், கங்கா அம்மாவிற்கு உண்மை தெரிய வருமா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜய், என்னானது? யார் செய்த வேலை? என்று கேட்டார். அப்போது குமரன், இது பசுபதி செய்தவேலைதான் என்று சொன்னார். உடனே விஜய், என்னால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது என்று எமோஷனாக பேசி இருந்தார். அதற்கு குமரன், எங்களால்தான் உங்களுக்கு பிரச்சனை என்று இருவருமே மாற்றி மாற்றி பேசிக்கொண்டார்கள். பின் நிவின், விஜய், குமரன் மூவருமே பசுபதியை பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். விஜய் சென்ற பிறகு கங்கா, காவிரி இருவருமே கடைக்கு வந்தார்கள். கடையை பார்த்து கங்கா கதறி அழுதார். குமரன், காவிரி இருவருமே சமாதானம் செய்தார்கள்.
அப்போது யார் செய்தது? என்று கங்கா கேட்க, நடந்த உண்மை எல்லாத்தையும் குமரன் சொல்லி விட்டார். அதற்குப்பின் பசுபதி போன் செய்து குமரனை வெறுப்பேற்றி இருந்தார். குமரன், காவேரி, நிவின் மூவருமே மாற்றி மாற்றி பசுபதி இடம் பேசி இருந்தார்கள். எப்படியாவது பசுபதியை பிடிக்க வேண்டும் என்று காவிரி சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த குமரனிடம் விசாரித்தார்கள். அப்போது கங்கா கடையில் நடந்த எல்லா உண்மையும் சொல்லி விட்டார். இதனால் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் காவிரி அம்மா, நீங்கள் இதை விஜயிடம் சொல்ல வேண்டியது தானே, நீங்கள் எதுக்கு இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறீர்கள் என்று கேட்டார். உடனே குமரன், இது காவிரியை பழிவாங்க பசுபதி செய்த வேலை. இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் சொன்னார். அதற்குப்பின் காவிரிக்கு போன் செய்த விஜய், ஏன் என்னிடம் இந்த உண்மையை சொல்லவில்லை? என்று கோபப்பட்டார். அதற்கு காவேரி, இது என்னால் வந்த பிரச்சனை. தேவையில்லாமல் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே விஜய், எதுவாக இருந்தாலும் நாம் சேர்ந்து பார்த்துக் கொள்ளலாம். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் காலையில் காவிரிக்கு உடல்நிலை சரியில்லாமல் முகத்தில் எல்லாம் அம்மை போட்டிருக்கிறது. இதை பார்த்த கங்காவின் மாமியார், உனக்கு அம்மா போட்டிருக்கிறது. நீ தள்ளி இரு என்று சொன்னார். உடனே கங்கா, காவிரி பார்க்க வந்தார். ஆனால், அவரை கிட்ட விடாமல் நீ வெளியே நில்லு. குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று சொன்னார். பின் காவிரி, விஜய் தங்கி இருந்த ரூமிற்கு சென்று விட்டார். அப்போது போன் செய்த விஜய்யிடம் காவிரி, எனக்கு உடம்பு சரியில்லை. எனக்கு அம்மா போட்டது. அதனால் என்னை எல்லோரும் தனியாக இருக்க சொன்னார்கள். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்று பயமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணி பேசி இருந்தார். விஜய், நீ தைரியமாக இரு என்று ஆறுதல் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரியை பார்ப்பதற்காக விஜய் வீட்டிற்க்கே வந்து விடுகிறார். விஜய்யை பார்த்தவுடன் காவிரி ஷாக் ஆகி, இங்கே எதற்கு வந்தீர்கள்? தயவு செய்து கிளம்புங்கள் என்று சொல்கிறார். அதற்கு விஜய், உனக்கு உடம்பு சரியில்லாமல் போது நான் எப்படி போவேன். நான் இங்கே இருந்து உன்னை பார்த்துக்கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே, பயப்படாதே என்று சொல்கிறார்.
மறுநாள் காலையில் விஜய், காவிரி இருவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரியின் அம்மா கதவை தட்டுகிறார். எதுவுமே தெரியாமல் விஜய் கதவை திறந்துவிடுகிறார். ஆனால், காவேரி அம்மா கங்காவிடம் பேசிக் கொண்டிருப்பதால் விஜயை பார்க்கவில்லை.
சீரியல் ட்ராக்:
உடனே விஜய் ஒளிந்து கொள்கிறார். உடனே பதறி அடித்துக் கொண்டு எழுந்த காவேரி தன் அம்மாவிடமிருந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்புங்கள் என்று சொல்கிறார். அவர், என்னாச்சு? உடம்பில் வேற ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேட்கிறர். ஏதேதோ சொல்லி காவிரி சமாளித்து தன் அம்மாவை அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் காவேரி- விஜய் இருவருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின் விஜய் ஹாஸ்பிட்டலுக்கு போகிறார். அங்கு காவிரிக்கு அம்மை போட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். அதற்கு டாக்டர், சில அம்மை குழந்தைக்கு பாதிப்பு தராது. ஆனால், சில அம்மை குழந்தைக்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னவுடன் விஜய் ரொம்பவே பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.