யமுனா சொன்ன வார்த்தையால் காவிரியை அடித்து வீட்டை விட்டு துரத்திய அம்மா, அடுத்து என்ன? மகாநதி

By subhashini · 3/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் நிவினை பார்த்து யமுனா, வழக்கம் போல சண்டை வாங்கி இருந்தார். காவிரியிடம் என்ன பேசினீர்கள்? எதற்காக அவளை அழைத்து கொண்டு வெளியே போனீர்கள்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நிவின் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். இதனால் கொந்தளித்த யமுனா, நிவினை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால், நிதின் எதையுமே கண்டுகொள்ளாமல் பாட்டு போட்டுவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய்யை, காவேரி பார்த்து பார்த்து அவரை கவனிக்கிறார்.

பின் வேப்பிலை பறிப்பதற்காக காவிரி மரத்தின் மேலே ஏறி கீழே விழுந்து விடுவதால் அவருடைய காலில் அடிபட்டது. இதனால் விஜய் கோபத்தில் திட்டினார். இன்னொரு பக்கம் சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் அவருடைய மனைவி, மகள்கள் எல்லோருமே சாமி கும்பிட்டார்கள். இதை அறிந்த விஜய், கேக் ஆர்டர் செய்தார். பின் தன்னுடைய அப்பாவின் பிறந்த நாள் கேக்கை பார்த்தவுடன் காவேரி எமோஷனலாக அழுதார். பின் காவிரி தன்னுடைய அப்பாவின் புகைப்படத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்டி கொண்டாடினார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் விஜய் தன்னுடைய பிஏவிற்கு போன் செய்து வெண்ணிலாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போ பிஏ, இன்னும் இரண்டு நாட்களில் வெண்ணிலாவிற்கு சுயநினைவு வந்துவிடும் என்றார். இதனால் விஜய் ரொம்பவே கவலையில் இருந்தார். அப்போது காவிரி, என்னாச்சு என்று கேட்டார். அதற்கு விஜய், வெண்ணிலா கண்ணை திறந்து உண்மையை சொல்வாளா? என் மீது இருந்த கோபத்தில் பழி போடுவாளா? என்று தெரியவில்லை. பசுபதியை எப்படியாவது பிடிக்க வேண்டும். என்ன செய்வதென்று புரியவில்லை என்று புலம்பி இருந்தார். உடனே காவிரி விஜய்க்கு ஆறுதல் சொல்லி அவருக்கு பாசமாக சாப்பாடு ஊட்டி விட்டார்.

நேற்று எபிசோட்:

மறுநாள் காலையில் விஜய்க்கு அம்மை குறைந்து இருக்கிறது. இதனால் விஜய், இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வீட்டுக்கு கிளம்பு என்கிறார். காவிரிக்குமே மனதில்லை இருந்தாலும் தன்னுடைய அம்மா போன் பண்ணிக் கொண்டிருப்பதால் கிளம்ப நினைத்தார். அப்போது விஜய், நிவினை வர சொன்னார். உடனே யமுனா, நீங்கள் காவேரியை பார்க்க தானே போகிறாய்? பொய் சொல்லிவிட்டு நீங்கள் ரெண்டு பேரும் செய்யும் வேலை எனக்கு தெரியாதா? என்று மீண்டும் காவிரி-நிவின் இருவரையும் மோசமாக பேசி இருந்தார். ஆனால், நிவின் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு போக வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு காரில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது காவிரி, வெண்ணிலா நிலைமையை பற்றி விசாரிக்கலாம் என்று சொன்னவுடன் நிவின் ஹாஸ்பிடலுக்கு விடுகிறார். ஹாஸ்பிடலுக்குள் நிவின்- காவிரி இருவரும் சொல்வதை யமுனா பார்த்து விடுகிறார். இதனால் யமுனாவிற்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. ஹாஸ்பிடலில் நிவின்- காவிரி இருவருமே வெண்ணிலாவின் உடல் நலத்தை பற்றி விசாரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற யமுனா, தன்னுடைய அம்மாவிடம் காவிரி- நிவினை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். கோபத்தில் கங்கா, யமுனாவை திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் யமுனா, காவிரி ஒர்க் ஷாப் போகவில்லை. என்னுடைய புருஷனுக்கு போன் செய்து அடிக்கடி பேசுகிறார். இருவரும் தனியாக சந்தித்துக் கொள்கிறார்கள். இப்போது கூட நிவின் தான் காவேரியை அழைத்து வரப்போகிறார் என்று சொல்வது எல்லாம் கேட்டு காவிரி அம்மாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஆகிறது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த காவிரியிடம் அவருடைய அம்மா விசாரிக்கிறார். காவிரியால் எதுவுமே பேச முடியவில்லை. இதனால் கோபத்தில் காவிரியை கழுத்தை பிடித்து அவருடைய அம்மா வெளியே தள்ளுகிறார். ஆனால், கடைசியில் இதெல்லாம் யமுனா கண்ட கனவு. பின் வீட்டிற்கு வந்த யமுனா, அவருடைய அம்மாவிடம் எதைப் பற்றியும் பேசாமல் அங்கிருந்து வெளியே வருகிறார். அப்போது காவிரி- நிவின் இருவருமே வருகிறார்கள். கோபத்தில் யமுனா, நிவினை அழைத்துக் கொண்டு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full