நிவினிடம் ருத்ர தாண்டவம் ஆடும் யமுனா, வெண்ணிலாவை நினைத்து வருந்தும் விஜய்- மகாநதி

By subhashini · 2/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் நிவின், யமுனா இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். காவிரியின் உடல் நலத்தை பற்றி விசாரித்தார்கள். அதற்குப்பின் காவிரி, நிவின் இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். அப்போது காவிரி, ஒர்க்ஷாப் விஷயமாக அம்மாவிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். விஜய்க்கு உடம்பு சரியில்லை. நான் தான் அவருடன் இருக்க வேண்டும் என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்து யமுனா இன்னும் கோபப்பட்டார். அதற்குப்பின் நிவின், ஒர்க் ஷாப் விஷயத்தை பற்றி காவிரியின் அம்மாவிடம் பேசி இருந்தார்.

அவர் ஆரம்பத்தில் தயங்கினாலும் நிவின் சொன்னதைக் கேட்டு சரி என்றார். நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு விஜய் இருக்கும் இடத்திற்கு போனார். அப்போது விஜய், இங்கே எதற்காக வந்தாய்? வீட்டில் ஏதாவது சொல்லப் போகிறார்கள் என்றார். அதற்கு காவிரி, அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை இந்த நிலைமையில் தனியாக விட முடியாது என்று சொன்னார். அதற்கு பின் நிவின் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு பின் காவேரி, பார்த்து பார்த்து விஜய்யை கவனிக்கிறார். ரெண்டு பேருமே ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் வீட்டிற்கு வந்த நிவினை பார்த்து யமுனா, வழக்கம் போல சண்டை வாங்கி இருந்தார். காவிரியிடம் என்ன பேசினீர்கள்? எதற்காக அவளை அழைத்து கொண்டு வெளியே போனீர்கள்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நிவின் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். இதனால் கொந்தளித்த யமுனா, நிவினை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால், நிதின் எதையுமே கண்டுகொள்ளாமல் பாட்டு போட்டுவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய்யை, காவேரி பார்த்து பார்த்து அவரை கவனிக்கிறார்.

நேற்று எபிசோட்:

பின் வேப்பிலை பறிப்பதற்காக காவிரி மரத்தின் மேலே ஏறி கீழே விழுந்து விடுவதால் அவருடைய காலில் அடிபட்டது. இதனால் விஜய் கோபத்தில் திட்டினார். இன்னொரு பக்கம் சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் அவருடைய மனைவி, மகள்கள் எல்லோருமே சாமி கும்பிட்டார்கள். இதை அறிந்த விஜய், கேக் ஆர்டர் செய்தார். பின் தன்னுடைய அப்பாவின் பிறந்த நாள் கேக்கை பார்த்தவுடன் காவேரி எமோஷனலாக அழுதார். பின் காவிரி தன்னுடைய அப்பாவின் புகைப்படத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்டி கொண்டாடினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் தன்னுடைய பிஏவிற்கு போன் செய்து வெண்ணிலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். அப்போ பிஏ, வெண்ணிலா விஷயத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்கிறார். இதனால் விஜய் ரொம்பவே கவலையில் இருக்கிறார். அப்போது காவிரி, என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு விஜய், வெண்ணிலா கண்ணை திறந்து உண்மையை சொல்வாளா? என் மீது இருந்த கோபத்தில் பழி போடுவாளா? என்று தெரியவில்லை. பசுபதியை எப்படியாவது பிடிக்க வேண்டும். என்ன செய்வதென்று புரியவில்லை என்று புலம்புகிறார். உடனே காவிரி விஜய்க்கு ஆறுதல் சொல்லி அவருக்கு பாசமாக சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் காலையில் விஜய்க்கு அம்மை குறைந்து இருக்கிறது. இதனால் விஜய், இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வீட்டுக்கு கிளம்பு என்கிறார். காவிரிக்குமே மனதில்லை இருந்தாலும் தன்னுடைய அம்மா போன் பண்ணிக் கொண்டிருப்பதால் கிளம்ப நினைக்கிறார். அப்போது விஜய், நிவினை வர சொல்கிறார். உடனே யமுனா, நீங்கள் காவேரியை பார்க்க தானே போகிறாய்? பொய் சொல்லிவிட்டு நீங்கள் ரெண்டு பேரும் செய்யும் வேலை எனக்கு தெரியாதா? என்று மீண்டும் காவிரி-நிவின் இருவரையும் மோசமாக பேசுகிறார். ஆனால், நிவின் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு போக வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full