காவிரியின் மீது வன்மத்தை கொட்டும் சகோதரிகள், கோபத்தில் நிவின் செய்தது - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின் வீட்டிற்கு வந்த உடனே வழக்கம்போல சண்டை வாங்க யமுனா காத்துக் கொண்டிருந்தார். அப்போது யமுனா, காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை உங்களுக்கு எப்படி முதலில் தெரியும். நீங்கள் ஏன் குமரன் மாமாவிடம் சொல்லவில்லை என்றெல்லாம் கேட்டார். அதற்கு நிவின், என்னைக்கும் நீ திருந்த மாட்ட. உன்னிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.
காவேரி- விஜய் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் காவிரி வீட்டில் விஜயை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார்கள். அந்த சமயம் பார்த்து விஜயினுடைய தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்தார்கள். இருவருமே காவிரியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள். உடனே சாரதாவும் சம்மதித்தார். பின் விஜய், தன் தாத்தா பாட்டியை அழைத்து சென்று நான் இங்கே இருக்கிறேன். நான் அங்கு வரவில்லை என்றார். இதை கேட்டு தாத்தா- பாட்டி இருவரும் ஷாக் ஆனார்கள்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் விஜய், காவிரி அங்கு வந்தாலும் வீட்டைப்பற்றி தான் யோசித்து கொண்டு இருப்பார். அதோடு நான் கொஞ்ச நாளைக்கு இவர்களுடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு தாத்தா பாட்டி இருவருமே வேதனைப்பட்டு சென்று விட்டார்கள். இன்னொரு பக்கம் சாரதா, விஜய்க்காக பார்த்து பார்த்து சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது கங்கா, குமரனுக்கு பிடித்த சாப்பாட்டை செய்ய சொல்ல, சாரதா அப்புறமாக செய்கிறேன் என்றார். அதோடு வீட்டு வேலைகள் எல்லாம் குமரனை செய்ய சொல்கிறார். இதெல்லாம் பார்த்து கங்காவிற்கு கடுப்பானது.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் கங்கா- குமரன் இருவருமே தங்களுடைய கடைக்கு சொன்னார்கள். அப்போது மளிகை சாமானை வாங்க குமரன் போனார். உடனே கங்கா தடுத்து நிறுத்தி அவர்களே வாங்கிக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றார். இதெல்லாம் குமரனுக்கு புரியவே இல்லை.
இன்னொரு பக்கம் விஜய், வேலைக்கு செல்வதற்காக கம்பெனிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரி, நீங்கள் உங்களுடைய கம்பெனியை பார்க்கலாம் என்றார். அதற்கு விஜய், இப்போதைக்கு வேண்டாம், நான் தனியாக வேலைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். அதையெல்லாம் தாத்தா பார்த்துக் கொள்வார் என்று காவிரியை சமாதானம் செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிவின் இடம் மீண்டும் காவிரியை பற்றி பேசி யமுனா சண்டை வாங்கினார். ஒரு கட்டத்தில் யமுனா, காவிரி வயிற்றில் வளர்வது உண்மையாலுமே விஜய் குழந்தையா? என்று கேட்கிறார். இதனால் கோபப்பட்ட நிவின், ஸ்பூனை தரையில் அடித்து அது யமுனாவின் தலையில் அடிபட்டு விடுகிறது. கோபப்பட்டு நிவின் அங்கு இருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் சாரதா சொல்லும் வேலை எல்லாம் குமரன் செய்வதால் கோபப்பட்டு கங்கா திட்டிக் கொண்டிருக்கிறார். இருந்தாலுமே சாரதா சொன்னவுடன் அங்கிருந்து குமரன் கிளம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து யமுனா, கங்காவை பார்க்க வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது யமுனா, காவிரியை பற்றி வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்கிறார். பதிலுக்கு கங்காவுமே விஜய், காவிரியை பற்றி புலம்பி கொண்டிருக்கிறார். கங்கா யமுனா இருவருமே சேர்ந்து காவிரியின் மீது பொறாமை பட்டு வன்மத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய் வேலைக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். காவிரி எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை. சாரதாவும் பார்த்து பார்த்து விஜய், காவிரியை கவனித்துக் கொள்கிறார். பின் யமுனா, கங்கா இருவருமே பிறக்கும் குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யமுனா சுற்றி சுற்றி காவிரியை பற்றி தான் திட்டிக்கொண்டே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது