விஜயை போலீஸிடம் மாட்டிவிடும் யமுனா, காவிரி என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜய், இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வீட்டுக்கு கிளம்பு என்கிறார். காவிரிக்குமே மனதில்லை இருந்தாலும் தன்னுடைய அம்மா போன் பண்ணிக் கொண்டிருப்பதால் கிளம்ப நினைத்தார். அப்போது விஜய், நிவினை வர சொன்னார். உடனே யமுனா, நீங்கள் காவேரியை பார்க்க தானே போகிறாய்? பொய் சொல்லிவிட்டு நீங்கள் ரெண்டு பேரும் செய்யும் வேலை எனக்கு தெரியாதா? என்று மீண்டும் காவிரி-நிவின் இருவரையும் மோசமாக பேசி இருந்தார். ஆனால், நிவின் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு போக வந்தார்.
நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காவிரி, வெண்ணிலா நிலைமையை பற்றி விசாரிக்கலாம் என்று சொன்னவுடன் நிவின் ஹாஸ்பிடலுக்கு விட்டார். ஹாஸ்பிடலுக்குள் நிவின்- காவிரி இருவரும் சொல்வதை யமுனா பார்த்து விட்டார். இதனால் யமுனாவிற்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. ஹாஸ்பிடலில் நிவின்- காவிரி இருவருமே வெண்ணிலாவின் உடல் நலத்தை பற்றி விசாரித்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற யமுனா, தன்னுடைய அம்மாவிடம் காவிரி- நிவினை பற்றி தப்பு தப்பாக பேசி இருந்தார். கோபத்தில் கங்கா, யமுனாவை திட்டி இருந்தார்.
மகாநதி சீரியல்:
பின் யமுனா, காவிரி ஒர்க் ஷாப் போகவில்லை. என்னுடைய புருஷனுக்கு போன் செய்து அடிக்கடி பேசி இருந்தார். இருவரும் தனியாக சந்தித்துக் கொண்டார்கள். இப்போது கூட நிவின் தான் காவேரியை அழைத்து வரப்போகிறார் என்று சொல்வது எல்லாம் கேட்டு காவிரி அம்மாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஆனது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த காவிரியிடம் அவருடைய அம்மா விசாரித்தார். காவிரியால் எதுவுமே பேச முடியவில்லை. இதனால் கோபத்தில் காவிரியை கழுத்தை பிடித்து அவருடைய அம்மா வெளியே தள்ளுகிறார். ஆனால், கடைசியில் இதெல்லாம் யமுனா கண்ட கனவு. பின் வீட்டிற்கு வந்த யமுனா, அவருடைய அம்மாவிடம் எதைப் பற்றியும் பேசாமல் அங்கிருந்து வெளியே வந்தார். அப்போது காவிரி- நிவின் இருவருமே வந்தார்கள். கோபத்தில் யமுனா, நிவினை அழைத்துக் கொண்டு போனார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் காவிரி வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய அம்மா, அக்கா எல்லோருமே நலம் விசாரித்தார்கள். அப்போது பாட்டி, கங்காவை விட காவிரிக்கு தான் வயிறு பெருசாக இருக்கிறது. அவள்தான் கர்ப்பமான மாதிரி இருக்கிறாள் என்று சொன்னவுடன் காவிரிக்கு தூக்கி வாரி போடுகிறது. பின் ஏதேதோ சொல்லி காவிரி சமாளித்து விட்டார். அதற்குப்பின் விஜய்க்கு போன் செய்த காவிரி, என் வயிறு பெரிதாகிவிட்டது. பாட்டி தான் கண்டுபிடித்து சொன்னார் என்றவுடன் விஜய்க்கு ஒரே சந்தோஷம். சீக்கிரமே நீ என்னிடம் வந்து விடுவாய். நானும் அந்த நாளுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று விஜய் சொன்னார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் யமுனா- நிவின் இருவருமே காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது யமுனா, நிவினிடம் பயங்கரமாக சண்டை போட்டார். குறிப்பாக காவிரிபி-நிவின் இருவரையும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாகவே பேசி இருந்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் கோபப்பட்ட நிவின், நடுரோட்டிலையே காரை விட்டு இறங்கி விட்டார். அதற்கு பின் நிவின், நீ பேசாத வந்தால் தான் நான் வண்டி எடுப்பேன் இல்லை என்றால் நான் சென்று விடுகிறேன் என்றார். வேறு வழியில்லாமல் யமுனா அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் காவிரிக்கு போன் செய்த விஜய், நான் பசுபதியை பிடிப்பதற்கு ஒரு திட்டம் போட்டு வைத்திருக்கிறேன். அதை உன்னிடம் சொல்ல முடியாது. நான் நிவினிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்.
https://youtu.be/pk2iV3TAYBU?si=yIubwxS5fANsO7O8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்போது ப்ரோமோவில் யமுனா, நிவின் இடம் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது யமுனா, நீங்கள் காவிரியைத் தானே பார்க்கப் போனீர்கள். அவளுக்காக தானே வீடு பார்த்து வைத்தீர்கள் என்றெல்லாம் சொல்கிறார். கோபம் தாங்க முடியாமல் நிவின், நான் விஜயை பார்க்கிற போனேன். அவனுக்காக தான் வீடு ரெடி பண்ணேன் என்று சொல்கிறார். இதை நம்புவதா?இல்லையா? என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் யமுனா. பின் போலீசுக்கு போன் செய்து யமுனா, விஜய் இருக்கும் இடத்தை சொல்கிறார். பின் போலீசுமே விஜய் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.