ஒரு பக்கம் IFF விருது. இன்னொரு பக்கம் காஸ்ட்லி கிப்ட் - மகாராஜா இயக்குனருக்கு அடித்த லக்

By subhashini · 21/12/2024

மகாராஜா படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு கிடைத்திருக்கும் விலை உயர்ந்த பரிசு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

பின் கடந்த ஜீன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்தது. இது விஜய் சேதுபதியின் உடைய ஐம்பதாவது படம்.

மகாராஜா படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. ஆனால், உலக அளவில் இந்த படம் 186 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. சமீபத்தில் கூட இந்த படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது. தமிழகத்தை தாண்டி சீனாவிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

இயக்குனருக்கு கிடைத்த பரிசு:

இந்த நிலையில் மகாராஜா படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கும் பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மகாராஜா படத்தின் வெற்றிக்காக இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு தயாரிப்பு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்திருக்கிறார்கள். இந்த பரிசை படத்தின் நாயகன் விஜய் சேதுபதி தான் இயக்குனருக்கு கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த 22வது சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் மகாராஜா படத்திற்காக சிறந்த எழுத்தாளர் பிரிவில் நித்திலன் சுவாமிநாதனுக்கு விருது கிடைத்திருந்தது.

மகாராஜா கதைக்களம்:

படத்தில் விஜய் சேதுபதி, தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை, திருடி விட்டார்கள் என்று போலீசில் புகார் அளிக்கிறார். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று அர்த்தம். போலீஸ், எந்த செல்வத்தை காணவில்லை என்று கேட்கிறார்கள். பின் விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை குறித்து சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த போலீஸுக்குமே கோபம் வருகிறது. அதன் பின் விஜய் சேதுபதியை அடித்து விரட்டுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தருகிறேன் என்று விஜய் சேதுபதி போலீஸ் இடம் சொல்கிறார்.

படம் குறித்த தகவல்:

ஐந்து ரூபாய்க்கு கூட தேராத ஒரு பொருளை இவ்வளவு விலை கொடுத்து இவன் தேட காரணம் என்ற என்று எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது. பின் எல்லோருமே அந்த பொருளை தேட ஆர்வம் காட்டுகிறார்கள். இறுதியில் திருடு போன லட்சுமி என்ன? அந்த பொருளுக்கு விஜய் சேதுபதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அதை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. தன் மகளுக்கு நடந்த அநீதிக்காக போராடும் தந்தையின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வியக்க வைத்து இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full