ஏன் இந்தி படங்கள்ல நடிக்க மாற்றீங்க, இந்தி பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மகேஷ் பாபு (இதுக்கு மேல பாலிவுட்ட அசிங்கபடுத்த முடியாது )

By Rajkumar · 11/5/2022

இந்தி சினிமாவில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் இளம் வயதில் தன்னுடைய தந்தை திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். பின் தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார் மகேஷ் பாபு.

மேலும், 1979 ல் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான மகேஷ் பாபு தற்போது தெலுங்கு சினிமா துறையில் பிரின்ஸ் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு வருகிறார். இவரது படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இதனாலே இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது.

விஜய்-மகேஷ் பாபு படங்கள்:

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் எல்லாம் மகேஷ் பாபு நடித்த படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஸ்பைடர். இந்த படம் தமிழிலும் வெளியாகி இருந்தது. ஆனால், தமிழில் ஓரளவு தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து மகேஷ் பாபு பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்து இருந்த படம் மகரிஷி.

மகேஷ் பாபு நடித்திருக்கும் படம்:

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'தளபதி 66' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது மகேஷ் பாபு நடித்திருக்கும் படம் 'சர்காரு வாரி பாட்டா'. இந்த படத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. நாட்டில் நடைபெற்ற வங்கி மோசடிகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு அளித்த பேட்டி:

படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருப்பதால் படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் மகேஷ்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதில் அவர் கூறியிருப்பது, இந்தியில் நடிக்க சொல்லி பல தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். நான் அதை ஏற்கவில்லை. என்னை அவர்களால் வாங்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்தி சினிமாவில் நடித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு தெலுங்கு சினிமாவிலேயே நட்சத்திர அந்தஸ்து, புகழ், ரசிகர்கள் அன்பு எல்லாம் கிடைத்துள்ளது.

ஹிந்தி மொழி குறித்து மகேஷ் பாபு கூறியது:

அதனால் இன்னொரு மொழி படத்தில் பணியாற்றுவது குறித்து நான் யோசிக்க மாட்டேன். தெலுங்கில் இன்னும் பெரியதாக என்ன படங்கள் பண்ணுவது என்பது தான் என்னுடைய முழு கவனமும் இருக்கு. நான் தெலுங்கில் தான் நடிப்பேன். அந்த படத்தை ஒட்டுமொத்த இந்தியாவுமே பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். அது இப்போது நடப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன். தெலுங்கு படங்களில் நடிப்பதை தான் என்னுடைய பலமாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full