விஜய வச்சி படம் எடுக்கறேனு சொன்னதும் மகேஷ் பாபு இதான் சொன்னார் - வாரிசு இயக்குனர் வம்சி.

By Rajkumar · 30/10/2022

வாரிசு படம் குறித்தும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு சொல்லி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படம்:

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் வம்சி அளித்த பேட்டி:

இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதல் பாடல் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வம்சி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் வாரிசு படம் குறித்து கூறியிருந்தது, விஜய்க்கு படம் பண்ண போகிறேன் என்று தெரிந்தவுடன் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சார் கால் பண்ணி எனக்கு வாழ்த்து சொன்னார்.

மகேஷ் பாபு குறித்து சொன்னது:

அவரும் நானும் இயக்குனர் - நடிகர் என்ற உறவை தாண்டி நல்ல குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம். என் பொண்ணு ஆதித்யாவும், அவர் பொண்ணு சித்தாராவும் ஒரே youtube சேனல் கூட வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா மீது எனக்கு எப்போது தனி மரியாதை இருக்கிறது. நிறைய தமிழ் படங்கள் தெலுங்கில் டப் ஆகி பெரிய ஹிட் கொடுத்திருக்கிறது. எல்லா தமிழ் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. விக்ரம், பொன்னியின் செல்வன் படங்கள் கிடைத்த வரவேற்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் நானும் இங்கு வந்து படம் பண்ணுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

வாரிசு ஷூட்டிங் குறித்து சொன்னது:

வாரிசு சூட்டிங்,சர்தார் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடந்தது. அப்போது கார்த்திக் சாரை சந்தித்தேன். அவருடன் நான் தோழா படத்தில் பணி பபுரிந்து இருக்கிறேன். அப்ப நல்லா சாப்பாடு வேணும் சார் என்று சொன்னேன். மறுநாளே பரோட்டா, மட்டன் கிரேவி என்று எனக்காக எடுத்துக் கொண்டு வந்தார். ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழித்து ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டே சாப்பிட்டோம். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் அவர் சூப்பராக பண்ணி இருந்தார். 20 வருடத்திற்கு முன்னாடியே நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். விஜய் சாரை வைத்து படம் பண்ணுவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எங்கேயோ எழுதி இருக்கு போல என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full