விஜய்க்கு சவால் விட்ட மகேஷ் பாபு - படத்த எல்லாம் காபி பண்ணாரு, இந்த சவாலை ஏற்பாரா விஜய்.

By Rajkumar · 9/8/2020

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடி கதாநாயகனாக களமிறங்கினார். 1979 ல் தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேஷ் பாபு, தற்போது தெலுங்கு சினிமா துறையில் பிரின்ஸ் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

https://twitter.com/urstrulyMahesh/status/1292385579712147459

சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை இருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் மகேஷ் பாபுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மகேஷ் பாபு நன்றிகளை தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் கொடுத்திருக்கிறார்.

அது என்னவெனில் தனது பிறந்தநாளுக்கு மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார் மகேஷ் பாபு. இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள மகேஷ் பாபு, பிறந்த நாளைக் கொண்டாட இதை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன. கிரீன் இந்தியா சேலஞ். இதை நான் ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன் போன்றவர்களுக்கு கொடுக்கிறேன். இந்த சங்கிலி எல்லைகளை கடந்து தொடரட்டும். அனைவரும் இதை ஆதரிக்க நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/OnlineVijayFC/status/1292392647923908608

மகேஷ் பாபு நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் இவர் நடித்த படங்களிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். எனவே, மகேஷ் பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா இல்லையா என்பதை பார்ப்போம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full