தனுஷின் உருவத்தை கேலி செய்துள்ள பாலிவுட் சீரிஸ் - காண்டான தமிழ் ரசிகர்கள். அப்படி என்ன சொல்லியுள்ளார்கள் பாருங்க.
இந்திய நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.
https://twitter.com/priangkaea/status/1422176546614169603
தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.
இதையும் பாருங்க : டீ குடிக்க போன இடத்தில் எகத்தால பேச்சு - சுப்ரமணியபுரம் பட வாய்ப்பு குறித்து பேசிய நடிகர் - இவர் செமயா பண்ணாரே.
இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதுவும் உலக அளவில் பிரபலமடைந்த அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் இயக்கும் 'The Gray Man' என்ற படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார். பல்வேரு ஹாலிவுட் பிரபலங்கள் நடிக்கும் இந்த படத்தில் தனுஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷை 'The Little Things' என்ற பாலிவுட் சீரிஸ் ஒன்றில் கேலி செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்றால், நீ உன் முகத்தை பார்த்திருக்கிறாயா தனுஷ் ? நீ அப்படியே அவரை போல தான் இருக்கிறாய், நீங்கள் இருவரும் தனுஷ் மற்றும் சோனம் கபூரை போல இருக்கீங்க. என்ன ஒரு வித்யாசம், இவன் தனுஷ் சூப்பர் மாடலாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார் என்று அந்த வீடியோவில் தனுஷ் பெயரை வைத்து கேலி செய்துள்ளனர்.
மேலும், தனுஷ் இந்த படத்தில் இணைந்ததற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பாலிவுட்டில் யார் இது போல தனுஷை கேலி செய்தது என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.ஏற்கனவே நடிகர் தனுஷ் இந்த படத்தில் கமிட் ஆன பின்னர் ஆங்கில ஊடகங்கள் சில நடிகர் தனுஷ் பாலிவுட் ஸ்டார் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷை தமிழ் சினிமாவை சேர்ந்தவர் என்று கூட சொல்ல வேண்டாம் இந்திய சினிமாவை சேர்ந்தவர் என்றாவது குறிப்பிடுங்கள் என்றும் பலரும் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.