மாஸ்டர் படம் சமயத்தில் ரஜினி போனை எடுக்கல, ஏன்னா - மாளவிகா மோகனன் ஓபன் டாக்

By subhashini · 7/8/2025

ரஜினிகாந்த் பற்றி நடிகை மாளவிகா மோகனன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வைரலாகி பிரபலமான நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் இவர் இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய பெரிய வசூல் சாதனை செய்து இருந்தது.

மாளவிகா மோகனன் திரைப்பயணம்:

மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த நிலையில் இவருக்கு பிரபலமும் கூடியது. பின் இவர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இருந்த தங்கலான் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் படமான கே ஜி எஃப் படத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாளவிகா மோகனன் படங்கள்:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'ஹிருதயப்பூர்வம்' என்ற படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படம் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் வெளியாகி வந்தது. இதை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சர்தார் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெறுகிறது.

மாளவிகா மோகனன் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி பற்றி மாளவிகா மோகனன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், மாஸ்டர் படம் வெளியான இரண்டு நாட்களிலேயே எனக்கு நிறைய போன் கால் வந்து கொண்டே இருந்தது. அப்போது நான் ரொம்ப பிஸியாக இருந்ததால் தெரிந்த நபர்களுடைய போனை மட்டும் தான் எடுத்துப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் ரஜினி சார் எனக்கு போன் செய்திருக்கிறார்.

ரஜினி பற்றி சொன்னது:

எனக்கு அது தெரியவில்லை. நானும் அந்த போனை எடுக்காமல் விட்டேன். பின் என் உதவி மேலாளர் ஒருவர், ஏன் சூப்பர் ஸ்டார் போனை எடுக்கவில்லை என்று கேட்டார். அப்போது தான் எனக்கு அந்த விஷயமே தெரிய வந்தது. அதற்கு பிறகு நான் சூப்பர் ஸ்டாருக்கு போன் செய்து பேசினேன். அப்போது அவர், மாஸ்டர் படத்தில் நீங்கள் ரொம்ப அழகாக இருந்தீங்க. உங்க படம் அபார வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி இருந்தார். சினிமா துறையில் வளர்ந்து வரும் என்னை சூப்பர் ஸ்டார் வாழ்த்தியது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full