தமிழில் சில நடிகைகளுக்கு நடிக்கவே தெரியல - மாளவிகா மோகனன் சொன்னது யாரை தெரியுமா?
தென்னிந்திய சினிமா உலகில் வைரலாகி பிரபலமான நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஆண்டு “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பேட்ட” படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய பெரிய வசூல் சாதனை செய்து இருந்தது.
அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கடைசியாக இவர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராஜாசாப் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் மூலம் இவர் பான் இந்திய நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதை அடுத்து இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனன் குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மாளவிகா மோகன் அளித்த பேட்டியில், எந்த மொழியில் உங்களுக்கு ஆளுமை இருக்கிறதோ அதில் நடிப்பது ரொம்ப சிறப்பானது. நான் மலையாளம் பேசுவேன். அதனால அந்த மொழியில் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தாலும் எளிமையாக இருக்கும். அதேபோல் தெலுங்கில் நடிக்கும் போது அந்த அளவிற்கு எளிதாக இருக்காது. வசனங்களை பிற மொழிகளில் என்னால் சீக்கிரமாகவே கற்றுக் கொள்ள முடியாது. திடீரென்று ஒரு வசனத்தை மாற்றி அமைத்தால் என்ன செய்வது என்று புரியாமல் இருப்பேன்.
மாளவிகா மோகனன் பேட்டி:
சில சமயங்களில் கடைசி நேரத்தில் வசனங்களை மாற்றி விடுவார்கள். அப்போது என்ன செய்வது என்று பயமும் வரும். ஆனால், சில நடிகைகள் இதை சமாளிக்க சில சுலபமான வழிகளை வைத்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழில் சில நடிகைகள் வசனங்களையே பார்க்க மாட்டார்கள். என்ன உணர்ச்சி என்பதை மட்டும் தான் கேட்டுக் கொள்வார்கள். சோகமாக இருக்க வேண்டிய காட்சியில் வெறுமனே முகத்தை மட்டும் சோகத்துடன் வைத்துக் கொள்கிறார்கள். சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு 1 2 3 4 என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகைகள் பற்றி சொன்னது:
அதேபோல் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ஏபிசிடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். டப்பிங் கீழ் அதை சரிவர வசனத்துடன் பொருத்தி விடுகிறார்கள். சில நடிகைகள் தன்னுடைய மொத்த கேரியரையுமே இது வேலையாக தான் செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருந்தது நடிகை நயன்தாராவை தான் சுட்டி காட்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காரணம் ஏற்கனவே இதற்கு முன்பு அளித்த பேட்டியில் மாளவிகா மறைமுகமாக நடிகை நயன்தாராவை விமர்சித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.