வைரலான படு ஆபாசமான புகைப்படம், ஒரிஜினல் போட்டோவை வெளியிட்ட மாளவிகா - எவ்ளோ மோசமா எடிட் செஞ்சிருக்காங்க பாருங்க.
தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிக்கப்படுகிறது என்று மாளவிகா மோகனன் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள நடிகை. இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படம் மூலம் தான் இந்தியில் அறிமுகமானார். பின் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு இவர் தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார் மாளவிகா.
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர்.
மாளவிகா மோகனன் நடித்த படம்:
ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருப்பதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள். பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் மாளவிகா மோகனன்:
இது ஒரு பக்கம் இருக்க, மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம். பெரும்பாலும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சிகரமான புகைப்படங்களாக தான் இருக்கும். இதனால் சோஷியல் மீடியாவில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு குற்றம் சாட்டி பகிர்ந்திருக்கிறார்.
மாளவிகா மோகனன் ட்விட்டரில் கூறியது:
அதில் அவர், என்னுடைய புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவர் ஆபாசமான முறையில் சித்தரித்து பதிவிட்டார். அதனை சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனமும் அதனை பகிர்ந்துள்ளது. போலியான என்னுடைய புகைப்படத்தை பார்த்தால் புகார் அளியுங்கள் என்று தெரிவித்து உள்ளார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது குறித்து பலரும் நடிகை மாளவிகாவுக்கு ஆதரவாக தெரிவித்து வருகின்றனர். அதோடு விமர்சித்தவர் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
மாறன் படம் பற்றிய தகவல்:
தற்போது மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், ஜி பி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இந்த படம் கூடிய விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.