மாறனில் வாய்ப்பு கிடைத்தது எப்படி, மாளவிகா சொன்ன விஷயத்தால் தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

By Ajju · 9/3/2022

மாறன் படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று மாளவிகா சொன்ன விஷயத்தால் தனுஷை கலாய்த்து வருகின்றனர். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். அதன் பின்னர் மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்கு நாயகியானார்.

மாறனில் மாளவிகா :

பேட்ட படத்தை விட மாஸ்டர் படம் வெளியான பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இப்படி ஒரு நிலையில் இவர் தனுஷின் மாறன் படத்தில் நடித்து இருக்கிறார். கார்த்திக் நரேன் எழுதி, இயக்கி உள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11 ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

தனுஷின் சிபாரிசு :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன் 'மாறன்' படத்தில் எப்படி வாய்ப்பு வந்தது என்பது குறித்து பேசி இருந்தார். அதில், இந்தப் படத்துக்காக என்னை சிபாரிசு பண்ணுனது தனுஷ். கார்த்திக் நரேன்கிட்ட, 'தாரா கேரக்டருக்கு சரியா இருப்பாங்கன்னு' தனுஷ்தான் என்னைச் சொல்லியிருக்கார். ஒரு சீனியர் நடிகரா எப்படியெல்லாம் நடிக்கணும்னு மாஸ்டர் க்ளாஸ் மாதிரி சொல்லி கொடுத்திருக்கார் தனுஷ் என்று கூறி இருந்தார்.

தனுஷை கேலி செய்யும் நெட்டிசன்கள் :

மாளவிகாவின் இந்த பேச்சை கண்டு ரசிகர்கள் பலரும் தனுஷை கேலி செய்து வருகின்றனர். நடிகர் தனுஷ் சமீபத்தில் தான் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார். இவரின் இந்த முடிவிற்கு பல காரணம் கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷ் நடிகைகளுடன் நெருக்கம் காண்பித்து வந்ததால் தான் விவாகரத்து வரை செல்ல காரணம் என்றெல்லாம் கூட சர்ச்சைகள் எழுந்தது.

மாஸ்டர் படத்திலேயே கேலிக்கு உள்ளான மாளவிகா :

இப்படி ஒரு நிலையில் தன் படத்தில் நடிக்க மாளவிகாவை தனுஷ்ஷே சிபாரிசு செய்து இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நடிகை மாளவிகா பேட்ட படத்தில் நடித்தாலும் மாஸ்டர் படத்தில் தான் நாயகியாக நடித்தார். இருப்பினும் அந்த படத்தில் இவரது நடிப்பு பெரும் கேலிக்கு உள்ளானது. அப்படி இருக்க எதை பார்த்து தனுஷ், மாளவிகாவை தன் படத்திற்கு சிபாரிசு செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full