பா ரஞ்சித் படத்தில் இருந்து கதாநாயகி மாளவிகா மோகனன் நீக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

மேலும், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் சார்பட்டா பரம்பரை.

Advertisement

பா ரஞ்சித் திரைப்பயணம்:

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

தங்கலான் படம்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது. இந்த படத்திற்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

Advertisement

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து கதாநாயகி விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

கதாநாயகி நீக்கம்:

அதாவது, இந்த படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகிருப்பது நடிகை மாளவிகா மோகனன். இவருடைய நடிப்பு சரியில்லாத காரணத்தினால் தான் படத்திலிருந்து இவரை இயக்குனர் பா ரஞ்சித் நீக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு பா.ரஞ்சித் எதிர்பார்த்த அளவிற்கு மாளவிகா மோகனன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மாளவிகா மோகனனுக்கு பதிலாக ஹீரோயினாக வேறொரு நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement