தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு கீராவின் இயக்கத்தில் வெளியான படம் பச்சை என்கிற காத்து. இப்படத்தில் நடித்தவர்தான் சரண்யா சசி. கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலப்பாவு மரியா காலிப்பினலு ஆகிய படங்களில் நடித்தவர். மேலும் பல டீவித் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.மலையாளத்தில் பிரபல நடிகையான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் மூலை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அவருக்கு அறுவை சிகிச்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சரண்யா, பினு சேவியர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் சரண்யா.இந்த நிலையில் நடிகை சரண்யாவிற்கு மீண்டும் மூளையில் கட்டி ஏற்பட்டது. இதனால் மீண்டும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

அவருக்கு மீண்டும் ஆபரேஷன் செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால சக நட்சத்திரங்கள் அவரது மருத்துவ செலவுக்கு உதவ வேண்டி கோரிக்கை வைத்தனர். 7வது முறை சிகிச்சைக்கு சரண்யாவிடம் போதிய பணம் இல்லாததால் இவரது நிலையை கண்டு பலரும் வருந்தி வந்தனர். மேலும், பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்த்தனர். கடைசியாக ஏப்ரல் 2021ல் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இதன் பிறகு இவருக்குக் கோவிட் -19 தொற்று ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிமோனியா காய்ச்சலும் ஏற்பட தீவிரமான சிகிச்சையில் இருந்தார் சரண்யா.. கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும் அவரது உடல் நிலை மோசமாக அடைந்து இருந்தது. சிகிச்சைக்கு சரியாகப் பணம் இன்றித் தவித்த சரண்யாவுக்கு சக நடிகை சீமா நாயர் என்பவர் உதவி வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 9, திங்கட்கிழமை, சரண்யா சசி சிகிச்சை பலனின்றி காலமானார்.

Advertisement
Advertisement