மக்கள் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பது சகஜமான ஒன்று. ஆனால், தற்போது திரைப்பட பிரமுகர்கள் கூட ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்களா? என்ற கேள்விகள் இந்த சம்பவத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் வந்து உள்ளது. மலையாளத்தில் ‘நார்த் 24 காதம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். இந்த படம் மெகா சூப்பர் ஹிட் படமாக சாதனை படைத்தது. மேலும், இந்த படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது. அதனை தொடர்ந்து சப்தமயஸ்ரீ தஸ்காரஹா, லார்ட் விலிங்ஸ்டோன் 7000 கண்டி போன்ற பல படங்களை இவர் இயக்கியுள்ளார். அதோடு தமிழில் தளபதி விஜய் அவர்களின் “தெறி” மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பினீஷ் பாஸ்டின். தற்போது சில தினங்களுக்கு முன்னால் கேரளாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவிற்கு இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன்,நடிகர் பினீஷ் ஆகிய இருவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் பினீஷ் அவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர்கள் நடிகரை சந்தித்து நீங்கள் சிறிது நேரம் தாமதமாக வாருங்கள் என்று தெரிவித்தார்கள். ஏன் இப்ப கிளம்பினால் சரியாக ஆறு மணிக்கு சென்றுவிடலாம். இது தான் சரியான நேரம் என்று கூறியதற்கு,மாணவர்கள் வேண்டாம் நீங்கள் சிறிது நேரம் கழித்து வாருங்கள் என்று கூறினார்கள். நடிகர் பினீஷ்க்கு ஒன்றும் புரியவில்லை. மேலும், மாணவர்கள் திரும்ப திரும்ப தாமதமாகவே வாருங்கள் என்றும் கூறினார்கள். பின் சிறிது நேரம் கழித்து ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு மாணவர்கள் கூறியது, நிகழ்ச்சிக்கு மற்றொரு சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராதாகிருஷ்ணன் மேனன் வந்திருக்கிறார். ‘அவர் ஒரே மேடையில் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சங்கடமாக உள்ளதாகவும், நான் வரவில்லை என்றும் இயக்குனர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

Advertisement

அதனால் தான் அவர் சென்ற பின்னால் நீங்கள் வாருங்கள் சார்’ என மாணவர்கள் கூறினார்கள். இதைக் கேட்டவுடன் நடிகர் பினீஷ் அவர்கள் பயங்கர கடுப்பாகி டென்ஷன் ஆகி விட்டார். மேலும், அவர் நேரடியாக விழா நடக்கும் கல்லூரிக்கு சென்றார். அப்போது மேடையில் ராதாகிருஷ்ணணன் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவருடைய நாற்காலிக்கு பக்கத்திலேயே தரையில் அமர்ந்து கொண்டார் நடிகர் பினீஷ். அப்போது நிகழ்ச்சியே பரபரப்பாக மாறியது. இதற்கிடையே நடிகர் பினீஷ் மேடை வராமல் தடுப்பதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வரும் முயன்று உள்ளார் என்றும், எல்லாம் மீறி பினீஷ் அவர்கள் மேடையேறினார் போலீசையும் கூப்பிடுவேன் என மிரட்டி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைக் குறித்து நடிகர் பினீஷ் கூறியது, மாணவர் சங்க தலைவர் உட்பட பல மாணவர்கள் என்னை ஓட்டலில் சந்தித்தார்கள். நீங்கள் தாமதமாக விழாவுக்கு வந்தால் போதும் என்று கூறினார்கள். நான் ஏன் என்று கேட்டேன். அவர்கள் இயக்குனர் மேனன் அவர்கள் என்னுடன் மேடையில் சமமாக உட்கார விரும்பவில்லை என்றும், அவர் எனக்கு சமமான நடிகரும் இல்லை என்றும் கூறினார்கள்.

மேலும், நான் சாதாரண நடிகன் தான். கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன். என் பெயருக்குப் பின்னால் பெரிய இயக்குனர்களோ, விருதுகளோ இல்லை. அதனால் தான் மன வேதனையோடு நான் தரையில் போய் அமர்ந்தேன் என்று கூறினார். மேலும்,இயக்குனர் மேனன்மீது பல புகார்கள் இணையங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், இதை இயக்குனர் மறுத்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் கூறியது, மருத்துவக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னால் தான் என்னை வரச்சொல்லி அழைப்பு வந்தது. நான் இரண்டு நாட்கள் தான் இடைவெளி இருப்பதால் என்னை தவிர யாரையும் நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். மேலும்,வேறு யாராவது வருகிறார்களா! என்று கேட்டதற்கு யாரையும் கூப்பிட வில்லை என்றும் சொன்னார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பினீஷ் அவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று சொன்னார்கள்.

Advertisement

மேலும்,அவர் வருகிறார் என்பதால் என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள் நான் வரவில்லை என்று தான் நான் கூறினேன். அதோடு இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் எப்போதும் பணம் வாங்குவதில்லை. பணம் சம்பாதிக்க இந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதனால் தான் விழாவிலிருந்து என் பெயரை நீக்குங்கள் என்று சொன்னேன். ஆனால், மாணவர்கள் தான் நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். மேலும், பினீஷ் அவர்களை மற்றொரு நிகழ்ச்சிக்கு நாங்கள் மாற்றி விட்டோம் என்றும் கூறினார்கள். அதன் பின்னர் தான் நான் விழாவில் பங்கு பெற்றார். மேலும், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததற்கு பினீஷ் அவர்களிடம் மனமார மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார். ஆகவே பிரமுகர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது அரசு தரப்பில் இந்த விவகாரம் விசாரணையில் போய்க் கொண்டிருக்கின்றது என பேச்சுகள் வருகிறது.

Advertisement
Advertisement