அடையாளத்தை தேடி பிரபலமான மலையாள ராப் பாடகர்- யார்ரா இந்த வேடன் , முழு விவரம் இதோ
ராப் பாடலின் மூலம் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் வேடன். இவருடைய உண்மையான பெயர் ஹிரந்தாஸ் முரளி. இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கைத் தமிழருடைய தாய்க்கும் கேரளாவை சேர்ந்த முரளி என்பவருக்கும் பிறந்தவர் தான். இவர் திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்வப்னபூமி என்ற பகுதியில் தான் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே இவருக்கு இசையின் மீது அதிக ஆர்வம். அதனால் தான் இவர் தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ் பாடல்களை மலையாளத்தில் எழுதி பாடுவது என்று தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
இவர் சின்ன வயதில் ஆற்றில் மீன் பிடிக்க செல்லும்போது சரியாக மீன் மீது அம்புகளை குறி பார்த்து எரிவார். அதனால் தான் இவருக்கு வேடன் என்று பெயர் வைத்தார்கள். இந்த பெயர் பின்னாளில் இவருக்கு அடையாளமாகவே மாறிவிட்டது. பள்ளி படிப்பை முடித்தவுடன் வேடன் பொருளாதார தேவைக்காக வேலைக்கு சென்றார். அதற்கு பின் அங்கிருந்து சிலருடன் சேர்ந்து இவர் கட்டுமான தொழிலுக்கும் சென்றார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாடலும் பாடிக்கொண்டிருந்தார்.
வேடன் திரைப்பயணம்:
மேலும், இவர் தன்னுடைய கலை ஆர்வத்தை விடாமல் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்படித்தான் இவருக்கு எடிட்டர் பி அஜித் உடைய அறிமுகம் கிடைத்தது. அவருடைய அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேடன் வேலைக்கு சேர்ந்தார். நாட்கள் செல்ல செல்ல டூபக் ஷகுர், எமினெம், அறிவு என பலர் உடைய பாடல்கள் பாடல் அறிமுகமானது. அவர்களுடைய பாடல்களில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதுதான் அவர் ராப் பாடல்களை எழுத தொடங்கினார்.
வேடன் குறித்த தகவல்:
கடந்த 2020 ஆம் ஆண்டில் 'நான் பாணன் அல்ல, பறையன் அல்ல' என்ற ஜாதி வர்க்கம், அதை அடக்குமுறைகளுக்கு எதிராக 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனி இசை பாடலை வெளியிட்டார். அவருடைய இசையும் குரலும் மலையாள உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. பலருமே யார்ரா இந்த வேடன் என்று தேடும் அளவிற்கு பிரபலமானார். அதற்குப்பின் இவருடைய ராப் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வருகிறது.
சினிமா வாய்ப்பு:
இவருடைய ராப் பாடல்களில் நிறைய புரட்சிகர கருத்துகள் இருக்கிறது. எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கி விடுவார். பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை இவர் சமூகஅடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து தொடங்கினார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் நரபலி என்ற பாடலை பாடி திரைத்துறையில் அறிமுகமானார். அதற்கு பின் இவர் பல படங்களில் பாடி வந்தார். இவர் பாடல் சர்வதேச விருது வென்று இருக்கிறது.
சர்ச்சை குறித்த தகவல்:
கடந்த ஆண்டு மிகப் பெரிய பிளாக்பஸ்டர் அடைந்த மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் கூட இவர் பாடல்களுக்கு வரிகளை எழுதி இருந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால், வேடனுக்கு படத்தில் பாடல்களை எழுதுவதை விட தனி இசை பாடல்கள் பிடிக்கும். அதோடு இடையில் இவர் நிறைய சர்ச்சைகள் எல்லாம் சிக்கி இருந்தார். அரசியலையும் தாக்கி கூட இவர் பாடல்களை எல்லாம் எழுதி இருந்தார். இவருடைய ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்கள். நாளுக்கு நாள் வேடனுக்கு ஆதரவு நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.