எனக்கு பெயர் வைத்ததே இவர் தான், எப்படி தெரியுமா? நிகழ்ச்சியில் நடிகர் மம்மூட்டி சொன்ன சுவாரசிய தகவல்

By ·

மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். இவரின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவரின் நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு முறை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று இருக்கிறார். இவர் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் டர்போ என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் தான் நடித்து இருக்கிறார். இதை அடுத்து நடிகர் மம்முட்டி அவர்கள் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மம்மூட்டி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு இடையில் நடிகர் மம்முட்டி அவர்கள் உடல்நிலை பிரச்சினை காரணமாக ஓய்வில் இருந்தார்.

மம்மூட்டி குறித்த தகவல்:

தற்போது அந்த பிரச்சனையிலிருந்து குணமாகி மீண்டும் படங்களிலும், நிகழ்ச்சிகளும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மம்மூட்டி கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் மம்முட்டி, என் பெயரை நான் தேர்ந்தெடுக்கவில்லை. என்னுடைய கல்லூரியின் போது ஒரு சம்பவத்தினால் தான் மம்மூட்டி பெயர் எனக்கு வந்தது. ஒருநாள் நண்பர்களுடன் நான் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

மம்மூட்டி பேட்டி:

அப்போது என்னுடைய பாக்கெட்டில் இருந்து என்னுடைய பர்ஸ் தவறி கீழே விழுந்தது. அப்போது அந்த பரிசை எடுத்துக் கொடுத்த என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய அடையாள அட்டையை பார்த்தார். அதில் என்னிடம் முஹமது குட்டி என்ற பெயரை சுருக்கி உங்களுடைய பெயர் மம்முட்டியா? என்று கேட்டார். அப்போதிலிருந்து நண்பர்கள் எல்லோருமே என்னை மம்மூட்டி என்று அழைக்க தொடங்கினார்கள்.

மம்மூட்டி பெயர் காரணம்:

அப்போது எனக்கு பெயர் வைத்தவர் இப்போது இங்கு வந்திருக்கிறார். அவருடைய பெயர் சசிதரன். பலர் எனக்கு பெயர் வைத்த கிரெடிட் எடுத்துக் கொண்டார்கள். அதைப்பற்றி கட்டுரைகளும் செய்திகளும் எழுதினார்கள். ஆனால், உண்மையில் எனக்கு மம்மூட்டி என பெயர் வைத்தது இவர் தான். நான் இவரை ஒரு ரகசியமாக பாதுகாத்து வந்தேன். பல ஆண்டுகளாக இவரை மறைத்து வைத்திருந்தேன் என்றெல்லாம் கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full