மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கேன்சரா? தீயாய் பரவும் தகவல் - முழு விவரம் இதோ
நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் என்ற செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். இவரின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவர் நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவைகள் வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று இருக்கிறார். மேலும், இவர் 450 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜூனியர் சீனியர், பேரன்பு என பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அடுத்து மம்முட்டி நடிப்பில் வெளிவந்த டர்போ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் தான் மம்மூட்டி நடித்து இருந்தார். கடைசியாக மம்முட்டி நடிப்பில் வெளியாகி வந்த படம் ‘Dominic and the Ladies Purse’.
மம்மூட்டி குறித்த தகவல்:
இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் பஜூகா, கலாம்கவல் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
மம்மூட்டி படங்கள்:
இந்த படங்கள் கூடிய விரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது. இதை அடுத்து தற்போது இவர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் MMMN என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினுடைய முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் தொடங்கப்பட்டிருக்கிறது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆன மோகன்லால், மம்முட்டி இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
மம்மூட்டிக்கு புற்றுநோய்:
இவர்களுடன் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஸில், தர்ஷனா ராஜேந்திரன் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாகவும், சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பலருமே பலவிதமான கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
மம்மூட்டியின் பி.ஆர்.டீம் சொன்னது:
இந்நிலையில் இது குறித்து மம்மூட்டியின் பி.ஆர்.டீம் கூறி இருப்பது, இந்த செய்தி முழுக்க முழுக்க பொய். மம்முட்டி லீவில் இருக்கிறார். அவர் ரம்ஜானுக்கு நோன்பு இருக்கிறார். அதனால் தான் மம்மூட்டி சூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்து இருக்கிறார். அதன் பின் இவர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன் லாலோடு சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.