தாயை இழந்த அடுத்த நாளே தொழுகை செய்ய வந்த மம்முட்டி - வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ.

By Rajkumar · 23/4/2023

தன் தாயை இழந்து அடுத்த நாளே மசூதியில் மம்மூட்டி தன் மகனுடன் சேர்ந்து சிறப்பு தொழுகை செய்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். இவரின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவர் தன்னுடைய நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவைகள் வாங்கி இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று இருக்கிறார். மேலும், இவர் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழில் ஆனந்தம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,ஜூனியர் சீனியர்,பேரன்பு என பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் மம்முட்டியின் தாயார் நேற்று இறந்திருக்கிறார். இவருக்கு 93 வயதாகிறது. மம்மூட்டி தாயார் பெயர் பாத்திமா இஸ்மாயில். இவர் கொச்சியில் இளங்குளம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டில் தான் வசித்து வந்தார். பின் இவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின் திடீரென்று நேற்று அதிகாலை பாத்திமா இஸ்மாயில் இறந்துவிட்டார். இவருடைய இறுதி சடங்கு நேற்று மாலை கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள முஸ்லிம் ஜமா அத் பள்ளியில் நடைபெற்றது. மேலும், மம்மூட்டியின் தாயாரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மம்முட்டி தன்னுடைய தாய் குறித்து பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறார். அதில் அவர், எல்லோருடைய வாழ்க்கையிலும் ரொம்ப நல்ல நண்பனும், முதல் நண்பனாக இருப்பது அம்மா தான்.

https://www.youtube.com/watch?v=c8jN9bOtiaQ

என்னுடைய அம்மா இளகிய மனம் படைத்தவர். நான் நடிக்கும் சினிமாவில் என்னுடைய கதாபாத்திரம் இறப்பது போல் இருந்தாலோ, என்னை யாராவது அடித்தாலோ என் அம்மா பயங்கரமாக அழுந்து விடுவார்
என்று என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி தன் அம்மா குறித்து கூறி இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் தாய் இறந்தும் தன் கடவுளுக்காக மம்முட்டி தன்னுடைய மகன் துல்கர் சல்மானுடன் மசூதியில் சிறப்பு தொழுகை செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full