தன் கல்லூரி நண்பர்களுடன் ரீ-யூனியன். மம்மூட்டி எப்படி இருக்கார் அவர் நண்பர்கள் எப்படி இருகாங்க பாருங்க. வைரல் புகைப்படம்.

By subhashini · 10/1/2022

தன் நண்பர்களுடன் மம்முட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். நடிகர் மம்முட்டி அவர்களின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவர் தன்னுடைய நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு முறைகள் வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று உள்ளார். மேலும், இவர் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மம்முட்டி அவர்கள் தமிழில் தளபதி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜூனியர் சீனியர், பேரன்பு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி அவர்கள் கடைசியாக “மாமாங்கம்” என்ற வரலாற்று கதையில் நடித்து இருந்தார். இப்படத்தை இயக்குனர் பத்ம குமார் அவர்கள் இயக்கி உள்ளார். வேணுமுன்னா பிள்ளை அவர்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளார். மேலும்,மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த சரித்திர படமாக மாமாங்கம் இருந்தது.

மம்முட்டி நடித்த மாமாங்கம்:

இந்த படத்தில் மம்முட்டி, உன்னி முகுந்தன்,சித்திக், மணிகுட்டன், மணிகண்டன், அனு சித்தாரா, இனியா முகுந்தன்,சித்திக், பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். நடிகர் மம்முட்டியின் மாமாங்கம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி இருந்தது. மேலும்,மாமாங்கம் படம் 1680 காலகட்ட பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பழரிப் பட்டுவின் திருவையாறில் நடக்கும் கலாச்சார விழாவில் களமாக கொண்ட கதையாக அமைந்து உள்ளது.

மம்முட்டி வெளியிட்ட புகைப்படம்:

தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் பேரன்பு. அந்த படத்தை இயக்கியவர் ராம். இப்படி ஒரு நிலையில் மம்முட்டி அவர்கள் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். பொதுவாகவே சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய பழைய நினைவுகளை என்றும் மறக்க மாட்டார்கள். அதிலும் சினிமா நட்சத்திரங்கள் தங்களுடன் 80, 90களில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது தங்கள் நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை பரிமாற்றிக் கொள்வதே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

வைரலாகும் மம்முட்டி புகைப்படம்:

அந்த மாதிரி பல நடிகர்கள் தங்களுடைய பழைய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை
பகிர்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது நடிகர் மம்மூட்டி தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். மம்முட்டி அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் தனது கல்லூரி கால நண்பர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது அவர்களுடன் ஒன்று கூடி மகிழ்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

70வயதிலும் மாஸ் காட்டும் மம்முட்டி:

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மம்முட்டி ஒருவர் மட்டும் தான் மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். மம்முட்டி 70 வயது ஆனாலும் இன்னும் இளமையாக இருக்கிறார் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்திற்கு அதிகமாக லைக்ஸ் செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full