மனம் கொத்தி பறவை நடிகையா இது..! இப்படி இருக்காங்க..! புகைப்படம் உள்ளே !

By Ajju · 9/5/2018
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் காமெடியினாக நுழைந்து தற்போது இளம் ஹீரோக்களில் ஒரு முக்கிய ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவருடன் கதாநாயகியாக நடித்த அனைவரும் தற்போது பெயர் சொல்கொள்ளும் அளவிற்காவது மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமாக தான் உள்ளனர். ஆனால் 2012 ஆம் ஆண்டு சிவகார்திகேயன் முதல் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது "மனம் கொத்தி பறவை " என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மீயா அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை. மனம் கொத்தி பறவை படத்திற்க்கு பிறகு தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு அமீபா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ஷ்யாம் நடித்த காவியன் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் கண்டந் 2017 ஆம்ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா என்று கூட தெரிவில்லை. ஷாம் படத்தை தவிர்த்து நடிகை ஆத்மீயா சென்ற 2017 ஆம் ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இதுவரை திரையில் வெளியானதா இல்லையா என்று கூட தெரியவில்லை.இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த "மனம் கொத்தி பறவை" படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிலான படங்களில் நடிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க இவர் நடித்த படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் தான் உள்ளது போல தெரிகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full