இது சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒன்று - 'பைசன்' பட நிஜ நாயகன் மணத்தி கணேசன் எக்ஸ்குளுசிவ்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் படம் பார்த்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கபடியில் நான் போட்ட உழைப்பை இயக்குனர் படத்தில் அற்புதமாக காண்பித்திருக்கிறார். துருவ் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். சினிமா ரொம்ப ஈஸின்னு நான் நினைத்தேன். நாங்கள் விளையாட்டில் எப்படி கஷ்டப்பட்டோமோ அதே மாதிரி தான் சினிமா துறையிலும் ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள்.
மணத்தி கணேசன் பேட்டி:
1994ல் விளையாடிட்டு வந்தபோது நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்தனோ அதை என் தம்பி மாரி செல்வராஜ் ரொம்ப சிறப்பாக காண்பித்திருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. ஸ்போர்ட்ஸ் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது என்று இதில் காண்பித்து இருக்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற போது எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தேனோ அதைவிட ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=y6WT8FtfWV8
பைசன் பற்றி சொன்னது:
சரித்திரத்தில் அளிக்க முடியாத ஒன்றை மாரி இன்று செய்திருக்கிறார். என் தம்பி என்னோட உயிரில் கலந்திருக்கிறார். துருவ் ஒருநாள் கூட முடியாதுன்னு சொன்னதே கிடையாது. நாங்க விளையாடற அப்போ மண் தரையில் விளையாடனும். இப்போ மேட் கோர்ட். கபடியில் தமிழ்நாடு டீம் சிறப்பாக இருக்கிறார்கள். தெற்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி கபடி விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
படத்தின் கதை:
கபடி விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் ஒரு கிராமத்து இளைஞன், ஜாதி பிரச்சனைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் என பல தடைகளை மீறி எப்படி தன் வாழ்க்கையில் வெற்றி பெற்று இந்திய அணியில் இணைகிறார் என்பது தான் படத்தினுடைய கதை. படத்தின் ஆரம்பத்தில் ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதில் விளையாடும் இந்திய வீரராக துருவ் விக்ரம் இருக்கிறார். இவர் இந்த இடத்துக்கு எப்படி வந்தார்? என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பது தான் கதை.