Breaking News : இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.!

By Rajkumar · 16/6/2019

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இவர், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வரலாற்று சிறப்பு மிக்க படமான பொன்னியின் செலவன் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக திடீரென சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டு 3-வது முறையாக நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார். இதன் பின்னர்,  2015ம் ஆண்டில்  ஓ காதல் கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டபோது  டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருக்கு 4 வது முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவரது நிலை குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.தற்போது அவருக்கு வயது 63 விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று வேண்டுவோம்.

behindtalkies AMP · Quick view
View full