அன்று Contestant இன்று Guest - 14 ஆண்டுக்கு முன் Kpyயில் பங்கேற்றுள்ள மணிகண்டன். இதோ வீடியோ

By Siva · 12/5/2023

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற கனவோடு போராடினார். அதற்காக இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

பின் இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மணிகண்டன். இந்த பணி அவருக்கும் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பை நெருக்கப்படுத்தியது. டப்பிங் செய்யும் திரைப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் மூலம் பழக்கம் அதிகம் கிடைத்தது. ஆனாலும், அதை அவர் ஒருபோதும் தன் ஆசைக்கு பயன்படுத்தியதில்லை. தனிப்பட்ட முறையில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி மணிகண்டன் அலைந்தார்.

மணிகண்டன் நடித்த படங்கள்:

பின் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் மணிகண்டன். அதற்கு பின் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டார்.

https://www.youtube.com/watch?v=aIYb4y0bIF4&t=96s

மணிகண்டன் திரை பயணம்:

பின் இவர் படங்களில் அழுத்தமான ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறினார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ஜெய் பீம் படத்தில் ராஜக்கண்ணாகவே மக்கள் மத்தியில் வாழ்ந்து விட்டார் மணிகண்டன். இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

குட் நைட் படம்:

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. மேலும், படத்தின் ப்ரோமோஷனுக்காக பட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது குட்நைட் பட குழுவினர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த வாரம் எபிசோட்டில் குட் நைட் பட குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

வைரலாகும் மணிகண்டன் வீடியோ:

அப்போது கதாநாயகன் மணிகண்டன் சினிமா நடிகர்களை போல் மிமிக்கிரி செய்து அசத்தியிருக்கிறார். அதிலும் வாலி படத்தில் அஜித் எப்படி பேசினாரோ அதேபோல் பேசி இருக்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் கிஷோர், ரகுவரன், விஜய் சேதுபதி என்று பலரை போல மிமிக்ரி செய்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன் 'நான் என்னோட கேரியர ஆரம்பிச்சதே இந்த ஷோல தான். என்கிட்ட மிமிக்ரினு ஒரு டேலண்ட் இருக்குன்னு உணர்த்தியதே இந்த நிகழ்ச்சியில் தான்' என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் kpy 4 நிகழ்ச்சியில் அவர் மிமிக்ரி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full