பிக் பாஸ் மணிகண்டனுக்கு குழந்தை பிறந்து இருக்கா? - 2வது மனைவியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்
பிக் பாஸ் மணிகண்டனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் மணிகண்டன். இவர் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணா. நடிகர் மணிகண்டன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவள்’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து இவர் அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இவர் வெள்ளித் துறையில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரால் தனது தங்கை போல் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. அதன் பின் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலும் அவரால் டைட்டிலை கைப்பற்ற முடியவில்லை.
பிக் பாஸ் மணிகண்டன்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார். தற்போது நடிகர் மணிகண்டன் அவர்கள் மெட்ராஸ் பிட்னஸ் ஜிம்மை தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில் மணிகண்டன் அவர்கள் நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
மணிகண்டன் திருமணம்:
சோபியா அவர்கள் தினேஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அட்டகத்தி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தார். பின் இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வந்தது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வரவில்லை.
மணிகண்டன் இரண்டாவது திருமணம்:
டிசம்பர் மாதத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் மணிகண்டன் ராஜேஷ் தனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருப்பதாக போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், தன்னுடைய இரண்டாவது மனைவி, மகள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் சோபியா -மணிகண்டன் இருவருக்குமே விவாகரத்து ஆனது உறுதியாகி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
https://www.youtube.com/watch?v=14nA9rESTMQ
சோபியா பதிவு:
மணிகண்டன் போட்ட போஸ்ட் வெளியான சில மணி நேரத்திலேயே நடிகை சோபியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயம் இப்போது தொடங்குகிறது. நான் இன்னும் வலிமையாக மாறி இருக்கிறேன். கூடிய விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.