'அஸ்வின் மேடையில் பேசியதை படத்தில் வச்சி இருக்கோமா' - ஜெய் பீம் புகழ் மணிகண்டன் கொடுத்த விளக்கம். வீடியோ இதோ.

By subhashini · 29/1/2022

ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் மணிகண்டன். இவர் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற கனவோடு போராடினார். பின் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து இருக்கும் சமயத்தில் தான் இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மணிகண்டன். பின் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார்.

https://www.youtube.com/watch?v=amMX31rMfr0&t=4s

நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் காதலும் கடந்து போகும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் மணிகண்டன். அதற்குபின் இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டார். பின் பல படங்களில் அழுத்தமான ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறினார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ஜெய் பீம் படத்தில் ராஜக்கண்ணாகவே மக்கள் மத்தியில் வாழ்ந்து விட்டார் மணிகண்டன்.

மணிகண்டன் திரை பயணம்:

இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது. தற்போது பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது மணிகண்டன் நடித்து உள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரவீன் ராஜ், ரித்திகா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோட் விழாவில் கலந்து கொண்ட மணிகண்டன் நடிகர் அஸ்வின் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

அஸ்வின் பேசிய சர்ச்சை கருத்து:

சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் என்ன சொல்ல போகிறாய். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய விஷயம் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன். நான் தூங்காத கேட்ட ஒரே கதை இதுதான். இதுவரை 40 கதைகளுக்கு மேல் கேட்டு தூங்கி இருக்கேன் என்று அஸ்வின் பேசி இருந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பயங்கர சர்ச்சையாக இருந்தார்கள். இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இருந்தாலும் அஸ்வின் பற்றிய மீம்ஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

மணிகண்டன் அளித்த பேட்டி:

மேலும், இதுகுறித்து பல பிரபலங்களும் அஸ்வினுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். இந்நிலையில் நடிகர் மணிகண்டன் அவர்கள் தன்னுடைய பட ப்ரோமோட் விழாவில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவரிடம் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் சில காட்சிகள் அஸ்வினுக்கு நடந்த சம்பவத்தை நினைவூட்டுவது போல் இருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு மணிகண்டன் அவர்கள் கூறியிருப்பது, உண்மையை சொல்லப் போனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாத 15, 16ஆம் தேதிக்குள் முடிந்தது. படத்துக்காக 32 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

வீடியோவில் 2 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?time_continue=156&v=MmUOcNYaeGU&feature=emb_title

அஸ்வின் குறித்து மணிகண்டன் கூறியது:

அதேபோல் அஸ்வின் படத்தின் விழா டிசம்பர் மாதம் நடந்தது. ஆகவே இந்த படத்துக்கும் அந்த படத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. பொதுவாகவே ஒரு மனிதர் உற்சாகத்துடன், சந்தோசமாக பேசும்போது தன்னையறியாமல் சில விஷயங்களை பேசுவோம். அதில் உணர்ச்சிவசப்பட்டு சுயநினைவை இழந்து பேசி விடுவோம். இது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் அவர் மீது பரிதாபப்படுகிறேன் என்று சொல்வதைவிட அவருடைய நிலைமையில் இருக்கும் போது நாமும் அந்த தவறு செய்வோம் என்று மணிகண்டன் பேசியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full