விஜய் டிவியில் மணிமேகலை பட்ட அவமானம். வீடீயோவை பகிர்ந்து சவால் விட்ட மணிமேகலை.

By Rajkumar · 19/3/2020

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

https://www.instagram.com/p/B9v9OUmHOHL/

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் மணிமேகலை.

https://www.instagram.com/p/B9vcMfkndgw/

மேலும், இவரது பதிவுக்கு பல ரசிகர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் இவர் பதிவிடும் பதிவுகள் மிகவும் வேடிக்கையாகவும் குயூடாகவும் இருக்கும். அதிலும் இவரது கணவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஏராளம். அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் மணிமேகலை, இந்த வீடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜே மணிமேகலையும் அவரது காதல் கணவர் ஹுசைனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு மாஸாக வருகின்றனர்.

பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ஹுசைன் மாஸாக டான்ஸ் ஆடுகிறார். ஆனால், மணிமேகலையால் அவருக்கு இணையாக டான்ஸ் ஆட முடியாமல் திகைத்து நிற்கிறார். ஆனால், ஹுசைன் மணிமேகலையைத் தூக்கி வளைத்து பயங்கரமாக டான்ஸ் ஆடுகிறார். மணிமேகலை ஒரு கட்டத்தில் டான்ஸ் ஆடமுடியாமல் கீழே சாய்ந்துவிட்டபிறகும் ஹுசைன் விடாமல் சுழற்றுகிறார். இந்த விடீயோவில் முதல்ல இந்த நடனத்தை கத்துக்கணும். அப்படி இல்லன்னா இந்த டான்ஸ் ஆட தெரிஞ்ச பயலுகலோட ஷோ பண்ண கூடாது. ஆட தெரியாம ரொம்ப பப்பி ஷேமா போயிடுச்சு. உனக்கு நான் சவால் விடுகிறேன் உசேன் ஒரு பெரிய டான்ஸரா வந்து காமிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full