எனக்கு பிடித்த தொழிலையே வேணாம்ன்னு சொல்ல வச்சாங்க, ஆனால் - விஜே மணிமேகலையின் வேதனை

By subhashini · 29/4/2025

தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் பற்றி விஜே மணிமேகலை சொன்ன விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மணிமேகலை பிரபலம் அடைந்தார்.

மணிமேகலை குறித்த தகவல்:

முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார். அதன் பின் அந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். அதேபோல், இந்த தம்பதி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

விருது விழாவில் மணிமேகலை:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் பேசிய மணிமேகலை. நான் சின்னத்திரைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டது. சின்ன திரையில் ஒரு வாய்ப்பை எப்படியாவது அடித்து பிடித்து வந்துவிடலாம். ஆனால், அதனை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்வதில் தான் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. பலர் உங்களுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். நாம் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் முடிவு எடுக்கவில்லை. ஆனால், நடக்கும் சம்பவங்கள் அதுவாக ஒரு இடத்தை நம்மை நோக்கி தள்ளும். என்னுடைய கல்யாண வாழ்க்கையும் அப்படித்தான் நடந்தது.

கேரியர் பற்றி சொன்னது:

கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருக்கும்போதுதான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு எங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் வாங்கினோம். அந்த சமயத்தில் நாங்கள் எடுத்த முடிவு ரொம்ப ரொம்ப முக்கியமான முடிவு என்று நினைக்கிறேன். எனக்கு ஆங்கரிங் தொழில் எவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், அப்படிப்பட்ட ஒரு தொழிலையே நான் என் வாயால் வேண்டாம் என்று சொல்லும் நிலை வந்தது. உண்மையில் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை எனக்கு வரும் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. நான் அந்த சேனலில் இருந்து விலகிய பிறகும் ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தேன்.

https://www.youtube.com/watch?v=yfhXBVWjwwU

வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:

அங்கு எல்லோருமே, நீங்கள் அடுத்ததாக எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டார்கள். நான் சேனலில் இருந்து விலகிப் போன போது கூட அப்படி வருத்தப்படவில்லை. ஆனால், அந்த நிகழ்விற்கு பின்னர் வீட்டுக்கு வந்து நான் பயங்கரமாக அழுதேன். அடுத்த நாளே நான் இப்போது வேலை பார்க்கும் சேனலில் வேலைக்கு சென்று விட்டேன். உண்மையில் நான் சேனலை விட்டு வெளியேறிய அடுத்த நாளே எனக்கு அழைப்பும் வந்தது. நான் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டேன். அப்போது நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். நாம் உண்மையாக ஒரு வேலையை செய்யும் போது அந்த உண்மை நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full