இஎம்ஐ கட்டலன்னு காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க, ஆனால் - குக் வித் கோமாளி மணிமேகலை எக்ஸ்க்ளூசிவ்

By subhashini · 12/3/2025

சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது எதார்த்தமான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மணிமேகலை பிரபலம் அடைந்தார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார். அதன் பின் அந்த சீசனில் போட்டியாளராக இருந்த தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். அதேபோல், இந்த தம்பதி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

மணிமேகலை குறித்து தகவல் :

இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் மணிமேகலை அவர்கள் கொரோனா காலகட்டத்தில் சொந்தமாக கிராமம் ஒன்றில் நிலம் வாங்கி அங்கு பண்ணை வீட்டை கட்டி இருந்தது அனைவரும் அறிந்தது. அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதற்குப் பின் இவர் சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தார். அதே போல் இரண்டு சொகுசு கார்கள், சொகுசு பைக் என்று தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி மணிமேகலை சென்று கொண்டு இருக்கிறார்.

சொகுசு வீடு வாங்கிய மணிமேகலை:

சமீபத்தில் மணிமேகலை, சென்னையில் ஒரு புதிய சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தார். இதனுடைய விலை ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மணிமேகலை, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. மக்கள் எப்போதுமே அவர்களுடைய சப்போர்ட் கொடுத்துக் கொண்டுதான் கொடுக்கிறார்கள். டான்ஸ் நிகழ்ச்சிக்கு நான் தொகுப்பாளினியாக வந்திருக்கிறேன். ஆனால், எனக்கும் டான்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மணிமேகலை பேட்டி:

மேலும், வீடு வாங்கினது எங்களுக்கு ரொம்ப ஒரு எமோஷனலான விஷயம். எங்களை பற்றி எல்லோருக்குமே எல்லா விஷயங்களும் தெரியும். சென்னையில் பெரிய சப்போர்ட் எதுவும் இல்லாத நேரத்தில் ஒன்னு நினைப்போம். அப்படி நினைத்த விஷயம் தான் இப்போது நிறைவேறி இருக்கிறது. எங்களுடைய உழைப்பில் வாங்கணும் என்று நினைத்தோம். அந்த விஷயம் நடந்திருக்கிறது. இது எங்களுடைய வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமானது. அதேபோல் காருக்கு இஎம்ஐ கட்டவில்லை என்றால் வண்டியை எடுத்துக்கொண்டு போயிடுவார்கள் என்று படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே அப்படி ஒரு விஷயம் எங்கள் வாழ்க்கையில் நடந்தது.

https://www.youtube.com/watch?v=O2JTCmnBk5E

சந்தித்த அனுபவம்:

முதலில் நாங்கள் ஐ 20 கார் வைத்திருந்தோம். மூணு மாசம் இஎம்ஐ கட்டவில்லை என்று நான்காவது மாசம் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அந்த நேரத்தில் நானும் என் கணவர் உசேனும் ஆறுதல் சொல்லிக்கொண்டோம். அப்போ நாங்கள் அடுத்த நான்கு வருடத்தில் ஒரு பிஎம்டபிள்யூ காரை வாங்கணும் என்று முடிவு பண்னோம். ஆனால், நாங்கள் நினைத்த இந்த விஷயம் இரண்டரை வருடத்திலேயே நிறைவேறியது. அதேபோல் வீடு வாடகை கொடுக்கவும் நிறைய பிரச்சனைகள் வந்தது. இப்படியான நேரத்தில் எனக்கு உசைன் தான் ஆறுதல் இருந்தார். அவர் மட்டும்தான் எனக்கு எப்போதுமே தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கிறார். அவரால் தான் நான் இந்த மீடியாவில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full