நானும் ரகுமானும் இதை பற்றி தான் அதிகம் பேசுவோம் - மனம்திறந்த இயக்குனர் மணிரத்தினம்

By subhashini · 28/5/2025

தமிழ் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு இயக்குனர் மணிரத்னம் அளித்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

மேலும், இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் வித்யாசமான கதைகளை திரை உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.
இவர் 1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த ‘பல்லவி அணு பல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார்.

மணிரத்னம் திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் உணரு என்ற படத்தை இயக்கி இருந்தார். பிறகு இவர் இதய கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்து இருக்கிறார்.

தக் லைப் படம்:

பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் காவியங்களில் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது மணிரத்தினம்-கமல் கூட்டணியில் தக் லைப் படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மணிரத்னம் பேட்டி:

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் பாடல்களில் ஆங்கில மொழி பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு மணிரத்தினம் கூறியிருப்பது, என்னுடைய பெரும்பாலான படத்தின் தலைப்புகள் தமிழில் தான் இருக்கிறது.

தமிழ் சினிமா பற்றி சொன்னது:

எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். ரகுமானும் நானும் தமிழ் இலக்கியத்திலிருந்து நிறைய கவிதைகளை எடுத்து பாடல்கள் ஆக்கியிருக்கிறோம். இன்றைய தலைமுறையினர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ஆங்கில பாடல் வரிகளை பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் மறுக்கிறேன். அது மட்டுமே ஒரு படத்தை ஓட வைக்காது. அது மட்டுமே ஒரு நல்ல படத்தை உருவாக்கிவிட முடியாது. நல்ல கதாபாத்திரங்களை அமைத்தால் மட்டுமே அது ஒரு கதைக்கு உதவும். பாடல்களும் தலைப்பு ஒரு படத்தை ஓட வைக்க
உதவாது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full