தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் செய்யாத காரணம் என்ன? இயக்குனர் மணிரத்னம் கொடுத்த விளக்கம்

By subhashini · 26/5/2025

தமிழ் சினிமா பற்றி இயக்குனர் மணிரத்னம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.
தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

மேலும், இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் வித்யாசமான கதைகளை திரை உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.
இவர் 1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த ‘பல்லவி அணு பல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார்.

மணிரத்னம் திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் உணரு என்ற படத்தை இயக்கி இருந்தார். பிறகு இவர் இதய கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்து இருக்கிறார்.

தக் லைஃப் படம்:

பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் காவியங்களில் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது மணிரத்தினம்-கமல் கூட்டணியில் தக் லைப் படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.

மணிரத்னம் பேட்டி:

இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நீயா நானா கோபிநாத் நடத்திய பேட்டியில் மணிரத்தினம் நிறைய சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=IX0GPAKwxFg

தமிழ் சினிமா வசூல்:

குறிப்பாக அதில், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் ஆயிரம் கோடி வசூலை எட்டி இருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா மட்டும் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸை எட்டவில்லை. அதற்கு என்ன காரணம்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு மணிரத்னம், நல்ல படங்கள் கொடுப்பது முக்கியமா? அல்லது பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்வது முக்கியமா? இதற்கு முன்பு எல்லாம் மக்கள் படத்தின் தரத்தை பற்றி யோசித்தார்கள். ஆனால், தற்போது படங்களின் கலெக்ஷனை நோக்கி தான் திரும்பி இருக்கிறார்கள். இது படங்களின் தரத்தை குறைத்து விடக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். நான் ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும் \என்ற சிந்தனையில் எல்லாம் படத்தை எடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full