நாங்கள் வித்தியாசமான படைப்பை எதிர்பார்த்தோம், ஆனால் - சர்ச்சைகளுக்கு இயக்குனர் மணிரத்னம் கொடுத்த விளக்கம்

By subhashini · 24/6/2025

தக் லைப் படத்தின் விமர்சனங்கள் பற்றி இயக்குனர் மணிரத்னம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கமல். கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலுமே வெளியாகி இருக்கிறது.

தக் லைஃப் படம்:

உலகம் முழுவதும் சுமார் 2200 தியேட்டருக்கு மேல் இந்த படம் வெளியாகி இருந்தது. இருந்தாலுமே முதல் நாளே இந்த படம் படும் மோசமான விமர்சனங்களை தான் குவித்தது. கமல் ரசிகர்களே இந்த படத்தை திட்டி இருந்தார்கள். இந்த படம் இந்தியன் 2வை விட மோசமாக இருப்பதாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்குமே வசூல் செய்யவில்லை. இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதும், 100 கோடி தான் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தக் லைப் படம் விமர்சனம் தொடர்பாக மணிரத்னம் பேட்டி அளித்து இருக்கிறார்.

மணிரத்னம் பேட்டி:

அதில் அவர், இந்த படத்தை மற்றொரு நாயகன் போல எதிர்பார்த்தவர்களுக்கு நானும் கமலும் இருவரும் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம்தான் மன்னித்து விடுங்கள். மீண்டும் அதே பாணியில் படம் எடுப்பது எங்களுடைய நோக்கம் கிடையாது.அப்படி ஏன் செல்ல வேண்டும்? நாங்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு படைப்பை உருவாக்க விரும்பினோம். இங்கு அதிகப்படியான எதிர்பார்ப்பை விட மற்றொரு எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. பார்வையாளர்கள் என்னிடம் இருந்து வேறு வடிவிலான ஒரு படைப்பை எதிர்பார்த்தார்கள்.
நாங்கள் கொடுத்ததை விட ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

கதைக்களம்:

படத்தில் கமலஹாசன் டெல்லியில் தாதாவாக இருக்கிறார். இவருக்கும் தாதா மகேஷ் என்பவருக்கும் இடையே தான் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த தாதா கேங்கை அழிக்க போலீஸ் நினைக்கிறது. இதனால் போலீசுக்கும் கமலுக்கும் இடையே நடந்த தகராறில் சிம்புவுனுடைய அப்பா கொல்லப்படுகிறார். சின்ன வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து சிம்பு அனாதையாக நிற்கிறார். அதற்குப் பின்னால் கமலஹாசன், சிம்புவை எடுத்து வளர்க்கிறார். தன்னுடைய சாம்ராஜ்யத்தின் அடுத்த அரசனாக சிம்புவை ஆக்க கமல் நினைக்கிறார். இதற்கிடையில் கமலஹாசனை கொள்ளவும் சதி நடக்கிறது.

அதற்குப்பின் தனக்கடுத்து சிம்பு தான் என்று எல்லோரிடமும் கமல் சொல்கிறார். அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக கமலஹாசன் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் கமல் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறார். ஆனால், இதை சிம்பு தான் செய்ய சொன்னார் என்று கமல் தவறாக புரிந்து கொள்ள, இதை அறிந்த சிம்பு மனம் உடைந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சிம்புவே கமலஹாசனை கொல்லவும் நினைக்கிறார். இதை அறிந்த தாதா குரூப், சிம்புவையும் கமலையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். சிம்புவும் கமலை கொல்ல ஆக்ரோஷமாக திட்டமெல்லாம் போடுகிறார். இறுதியில் சிம்புவின் சதி திட்டம் பலித்ததா? கமலஹாசனுக்கு என்ன ஆனது? மற்ற தாதாக்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full