என் சினிமா வாழ்க்கை அழிந்ததற்கு காரணமே ரஜினி தான் - நடிகை மனிஷா கொய்ராலா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதற்கான காரணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் வெளிவந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்தார்.
அதற்குப் பிறகு இவர் இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார். அதுவும் ஹிந்தியில் தான் இவரது முதல் படமான ‘சௌடாகர்’ 1991ல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் அதிகமாக ஹிந்தி மொழி படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய “பம்பாய் ” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார்.
மனிஷா கொய்ராலா திரைப்பயணம்:
இவர் இந்த ஒரு படத்திலே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். அதன் பின் இவர் தமிழில் கமலஹாசனுடன் ‘இந்தியன்’, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’, அர்ஜுனுடன் ‘முதல்வர்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு என்று கூட சொல்லலாம். மேலும், இவர் 90களில் நடித்த முன்னணி நடிகைகளுக்கு பயங்கர டஃப் கொடுத்த நடிகை என்று கூட சொல்லலாம்.
மனிஷா திருமணம்:
பின் இடையில் இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். இதற்கிடையே இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்தார். ஆனால், இந்த திருமணம் இரண்டு வருடம் கூட நீடிக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதற்குப் பின் 2012ஆம் ஆண்டு
மனிஷா கொய்ராலாவுக்கு கருப்பையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் இவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எல்லாம் பெற்றிருந்தார்.
மனிஷா பேட்டி:
இதனால் இவர் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை எட்டிப் பார்த்தார் மனிஷா கொய்ராலா. அதன் பின் இவர் இந்தி மொழி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரமண்டி, தி டைமண்ட் பஜார் போன்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அதோட புற்றுநோயால் பாதித்த பலருக்குமே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மனிஷா கலந்து கொண்டு வருகிறார்.
வாய்ப்பு குறைய காரணம்:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தென்னிந்திய படங்களில் நடிக்காததற்கான காரணம் குறித்து மனிஷா, பாபா படம் தான் நான் கடைசியாக தமிழில் நடித்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது படுதோல்வியை தான் சந்தித்தது. அது வெறும் தோல்வி மட்டுமல்ல மிகப்பெரிய பேரழிவாக இருந்தது. அதோடு என்னுடைய தென்னிந்திய திரைப்படமும் முடிந்து விடும் என்று நான் நினைத்தேன். அதுபோல தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு தென்னிந்தியாவில் பட வாய்ப்புகள் எனக்கு குறைய தொடங்கிவிட்டது. பாபா படத்திற்கு முன்பு நல்ல தென்னிந்திய படங்களை நடித்து வந்தேன். ஆனால், பாபா படத்தின் தோல்விக்கு பின்னர் பட வாய்ப்புகளே முற்றிலுமாகவே நின்று விட்டது என்று கூறியிருந்தார்.