ஒவ்வொரு சந்திப்பிலும் என்னை வியப்பில் ஆழ்த்துவார் - கமல் குறித்து இந்தியன் நடிகை மனிஷா கொய்ராலா பதிவு

By Rajkumar · 1/7/2024

நடிகர் கமல்ஹாசன் குறித்து நடிகை மனிஷா கொய்ராலாவின் பதிவுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் கமல்ஹாசன். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் 'இந்தியன் 2'. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' படம் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. 'இந்தியன்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. சமீபத்தில் நடிகர் கமலை சந்தித்துள்ள மனுஷா கொய்ராலா, அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கமலை புகழ்ந்துள்ளார்.

மனிஷா கொய்ராலா பதிவு:

அதில் மனுஷா, 'நான் பணியாற்றிய புத்திசாலித்தனமான மனிதர்களில் கமல்ஹாசன் ஒருவர். திரைப்படங்களும், புத்தகங்களும் இப்போது ஃபேஷனும் அவரது உலகம். மனதையும் ஆன்மாவையும் மேம்படுத்தும் சிறந்த புத்தகங்களை எனக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார். சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது. அவருடன் நீண்ட நேரம் உரையாட முடியும். மணிகணக்கில் அவர் பேசுவதை நம்மால் கேட்க முடியும்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தன்னை அவர் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Manisha Koirala (@m_koirala)

மனிஷா கொய்ராலா குறித்து:

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய 'பம்பாய்' திரைப்படத்தின் மூலம் நடிகை மனிஷா கொய்ராலா தமிழ் அறிமுகமானார். இந்த ஒரு படத்திலே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றார் மனிஷா. இவர் அதிகமாக ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் 'இந்தியன்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பாபா', அர்ஜுனுடன் 'முதல்வர்' உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 :

'இந்தியன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்ப படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்தியன் 2 ட்ரெய்லர்:

வெற்றிகரமாக 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்த நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிரைலரில் மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, மனோ பாலா உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கின்றனர். ஆனால், விவேக்கின் காட்சிகள் இடம் பெறவில்லை. இப்படி அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 'இந்தியன்' முதல் பாகம் அளவிற்கு சேனாதிபதி மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full