இயக்குனார் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘வழக்கு என் 18/9’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன் பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் மனிஷா.

மனிஷா யாதவ் 1992ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். தனது கல்லூரி காலம் முதலே மாடலாக இருந்து வந்த மனிஷா 2012ஆம் ஆண்டு வழக்கு என் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதன் பின்னர் பல தமிழ் படஙக்ளில் நடித்து வந்த இவர் ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

Advertisement

அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறையவே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28 2’ படத்தில் சொப்பன சுந்தரி என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் கிட்டாததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளை சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினர். இந்த நிலையில் தனது கணவருடன் வெளிநாடு சென்ற மனிஷா கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement