உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்தேன்? நடிகை மஞ்சிமா மோகன் ஓபன் டாக்

By subhashini · 17/8/2025

உடல் எடை அதிகரிப்பு பற்றிய விமர்சனங்களுக்கு மஞ்சுமா மோகன் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார்.

1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார். அதுவும் இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற இருந்த கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

மஞ்சுமா மோகன் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தேவராட்டம், முடிசூடா மன்னன் என சில படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் மஞ்சுமா மோகன் சினிமாவில் சிறிது ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான். இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது.

மஞ்சுமா மோகன் உடல் எடை:

இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார் .அதற்குப் பிறகு இவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டு ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தார். இதனால் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். அதனால் இவருடைய உடல் எடை கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும் மஞ்சிமா மோகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இவருடைய உடல் எடையை குறித்து பலரும் ட்ரோல் செய்து வந்திருந்தார்கள்.

மஞ்சுமா மோகன் பேட்டி:

இதனால் மஞ்சுமா மோகன் பெரிய மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் பேட்டியில் கூறி இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மஞ்சுமா மோகன், எனக்கு பிசிஓடி பிரச்சனை இருக்கிறது. இதனால் தான் எனக்கு உடல் எடையும் கூடியது. நான் ஆரோக்கியமாக இருப்பதாகத்தான் நினைத்தேன். பிசிஓடியை குறைக்க வேண்டி இருந்தது. எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தேன். அறுவை சிகிச்சை மூலம் எடையை குறைக்க மருத்துவர்களை எல்லாம் சந்தித்தேன்.

https://www.youtube.com/watch?v=Q6tvVUXnArY

விமர்சனங்களுக்கு பதிலடி:

உடல் எடை தான் மிகப்பெரிய பிரச்சனை என்பது போல எல்லோருமே பேசுகிறார்கள். ஆனால், ஆரோக்கியத்தை பற்றி பேச மாட்டார்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா என்னுடைய வேலை மட்டும்தான். எடையை குறைத்து வேறொரு தோற்றத்திற்கு வந்தால் ஒருவேளை இன்னும் சில படங்கள் கிடைத்திருக்கலாம். அதன் பிறகு யாரும் நாம் எப்படி இருக்கிறோம் என்று விசாரிக்க மாட்டார்கள். வேலை சம்பந்தமில்லாத வேற இலக்குகள் எனக்கு உள்ளது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full