'ஏன்டா கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்தேனோ' வருத்தப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன்- காரணம் இது தான்
தன்னுடைய காதல் கணவன் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் பிரபலங்கள் பலர் தங்களுடன் சேர்ந்து நடித்த நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பாக்யராஜ்- பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
அந்த வரிசையில் கௌதம் கார்த்திக்- மஞ்சுமா மோகன் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்திருந்தார்கள். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்றிருந்தது. கௌதம் கார்த்திக்- மஞ்சுமா மோகன் இருவருமே 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.
மஞ்சிமா மோகன்-கௌதம் கார்த்தி திருமணம்:
இந்த படத்தின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்குப் பின் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மஞ்சுமா மோகன், திருமணத்திற்கு முன்பு என்னுடைய உடல் எடை கொஞ்சம் அதிகரித்து குண்டாக இருந்தேன். இதனால் பலரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
மஞ்சிமா மோகன் பேட்டி:
அதுமட்டுமில்லாமல் நான் உடல் எடை குண்டாக இருப்பதை பார்த்து சிலர், நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி கமெண்ட்களால் நான் சில நேரம் அழுதிருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் வரும் கமெண்ட்டை பார்த்து வீட்டில் உள்ளவர்களும் வருத்தப்படுவார்கள். கௌதம் கார்த்திக்கும் இதனால் ரொம்பவே கவலைப்படுவார். என்னால் அவரும் பாதிக்கப்படும்போது, நான் ஏன் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்படுவேன்.
கௌதம் கார்த்தி குறித்து சொன்னது:
இருந்தாலும், என் கணவர் ஒருபோதும் அதை என்னிடம் காட்டிக் கொண்டதே கிடையாது. என் கணவர் எனக்கு ரொம்ப பக்கபலமாகவும், ஆறுதலாகவும் இருக்கிறார். அதனால் எந்த கமெண்டுகளும் என்னை பாதிப்பதில்லை என்று கூறி இருக்கிறார். மேலும், சில மாதங்களாகவே மஞ்சிமா மோகன் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன்.
மஞ்சிமா மோகன் திரைப்பயணம்:
இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.